பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

பாரதிதாசன்



ஆண் குழந்தை தாலாட்டு


ஆராரோ ஆரரிரோ ஆராரோ
ஆராரோ ஆரரிரோ ஆராரோ
ஆராரோ ஆரரிரோ ஆராரோ
ஆராரோ ஆரரிரோ ஆராரோ

காராரும் வானத்தில் காணும்
முழுநிலவே!
நீராரும் தண்கடலில் கண்டெடுத்த
நித்திலமே!

ஆசை தவிர்க்கவந்த ஆணழகே
சித்திரமே!
ஓசை ஒளித்துமலர் உண்ணுகின்ற
தேன்வண்டே!

உள்ளம் எதிர்பார்த்த ஓவியமே
என்மடியில்
பிள்ளையாய் வந்து பிறந்த
பெரும் பேறே!

சின்ன மலர்வாய் சிரித்தபடி
பால்குடித்தாய்
கன்னலின் சாறே, கனிரசமே
கண்ணுறங்கு.