பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 153 ஒப்பிட்டுப்பார்த்த போது சிறிதும் தரம் குறையாது உயர்தரம் உடையதாகவே இருந்ததாம். இவ்வாறு மாற்று அறிவதற்காக - மாதிரிக்காக வெட்டி யெடுத்து வைக்கும் பொன் துண்டுக்கு "மச்சம்' என்று பெயராம். இவ்வாறு சுந்தரர் மச்சம் வெட்டி எடுத்துவைத்துக்கொண்டு மற்ற பொன் கட்டிகளைத் திருமுது குன்ற மணிமுத்தாற்றில் விட்டதையும், பின்னர்த் திருவாரூர்க் குளத்தில் சிறிதும் குறையாத நிலையில் எடுத்ததையும் அறிவுக்கும் பெரிய புராணப் பாடல் பகுதிகள் அகச்சான்றுக்காக வருமாறு: வன்தொண்டர் மச்சம் வெட்டிக் கைக்கொண்டு மணிமுத் தாற்றில் பொன்திரள் எடுத்து நீருள் புகவிட்டுப் போதுகின்றார் (3268) 'ஒட்டறு செம்பொன் ஒக்க ஒருமாவுங் குறையாமல் காட்டுதலும் மகிழ்ந்தெடுத்துக் கொண்டு கரை ஏறினார் (3296) இந்த இலக்கியச் சான்றைக் கொண்டு, பொன் துண்டுக்கு மச்சம் என்னும் பெயர் உண்மையை அறியலாம். இதை வலியுறுத்தவே, இவ்வளவு நெடுந் தொலைவுப் பயணம் செய்ய வேண்டியதாயிற்று. பொன்னின் மாற்று அறிதலுக்கு "மச்சம் பார்த்தல்' என்னும் வழக்காறு உலகி யலிலும் உண்டு. எனவே, மச்சமாகிய பொன்னின் தன்மை உடைமை யால் பொன்னாங் கண்ணிக்கு மச்சி, மச்சிக் கண்ணி, மச்சியாங் கண்ணி, மச்சியாங் காணி, மச்சி யாச்சி, மச்சி யாத்தி, மச்சிப் பாசி ஆகிய பெயர்கள் தரப்பட்டன என்றும் சொல்லலாம் அல்லவா? பெயரிலேயே பொன் என்னும் சொல் முதலில் உள்ள தன்றோ? இந்த மூன்றாங்