உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கழுதை அழுத கதை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ാജഗു ു്

தீயைப் போல உதிரும் (ஐங்குறு : 320 : 1-2) - மலையில் தோன்றிய தீயினைப் போல - இலவம் சுரத்தில் காணப்பெற்றது (ஐங்குறு : 338 2-3) - நெருப்புப் போன்று உதிர்ந்தன இலவத்து மலர்கள் (ஐங்குறு : 368 : 1-3); - மலர்ந்த இலவ மரத்தில் ஏறிய மயில் எரிபுகு மகளிரைப் போலக் காணப்படும் (ஐங்குறு : 3 : 1-3); - என்றவாறு இலவம்பூ பூக்கும் காட்சிகளையெல்லாம் கழக இலக்கியக் களத்தில் கண்டு கண்டு துய்த்த நம் தூயவர் - இப் பாவியத்தில் பல்வேறு மரங்களை வகைவகையாக அடுக்கிக் கூறிச் செல்லும் வேளையில் - இலவ மரத்தைக் குறிப்பிட வேண்டிய இடம் வருகையில் மிக இயல்பாக - மிக மென்மையான வீச்சாக ஒரேயோர் ஒற்றைச் சொல்லை மட்டும் அவ் இலவத்துக்கு முன்னிடாக இடுகின்றார்! அது - இது!

'முந்திரியும் நல்லிலந்தும் மூங்கிலொடு தீயிலவம்’ (876)

அவர் கண்ட கழக இலக்கியத்துள் இலவங்கள் நின்றிருந்த ஒளிக்கோலத் தாக்கக் காட்சிகளின் ஒட்டு மொத்தத் திரள்வுப் பொறியாகவே இத் "தீ" எனும் சொல் - அம் மரப் பெயர்ச் சுட்டுகையின் முன் ஒள்ளெரியாகச் சுடர் விடுகின்றது!

குறள சாறறுத தாககுரவு!.

கடைக் கழக அறநூல்களிலேயே தலைசிறந்ததாகிய திருக்குறளுள் தோய்வும் ஆய்வும் வாய்ந்த வாழ்க்கைய ராகிய நம் பாவலரேறு - இப் பாவியத்துள் உரிய இடங்களில் அதனைப் பதிவு செய்திருப்பதோடு - அதன் தன்னேரிலாத சிறப்பையும் நன்கு பாராட்டியுள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/24&oldid=665337" இலிருந்து மீள்விக்கப்பட்டது