பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்ட்டன் 8 ! முடியும். வீட்டில் சொத்துடன் வாழமுடியும். புற வாழ்வில் கவலைகள், இக்கட்டுகள் நீங்கள் பார்வையின்றி யிருப்பதால் இனி ஏற்படா. பெலித்திய ஆண்டைகளிடம் சென்று பரிந்து பேசப்போகிறேன். அவர்கள் என் வேண்டுகோளுக்கு இசைவார்கள். இ ந் த ச் சிறையிலிருந்து விடுவித்து, என்னேடு வாழ உங்களை அழைத்துச் செல்லமுடியும் என்று நம்புகிறேன். அங்கே இரட்டிப்பு அன்புடனும், பரிவுடனும் உங்களைக் காக்கமுடியும. அது ஒன்றே இப்போது எனக்கு மகிழ்வுதரும் பணியாக அமையும். என் இரட்டிப்பு அன்பி லும், அரவணைப்பிலும், காப் பி லும், என்பொருட்டுத் தாங்கள் இழந்த உங்கள் பார்வையின்மையை உணர மாட்டீர்கள். சிம்சோன்: இல்லை, இல்லை. என் இப்போதைய நிலை பற்றிக் கவலைப்படவேண்டா. அது முறையானது அன்று. நீயும் நானும் பிரிந்து வெகுகாலமாயிற்று. இனி இணைவதற்கு நேரமுமிலலை. பெ ருத்தமானதும் இல்லை. ஏற்கெனவே வீழ்ந்த வஞ்சக வலையில் விழிப்பின்றி மீண்டும் விழுவேன் என்று எண்ணவேண்டா. உன் கவர்ச்சியான வழிகளும், போதையூட்டும் இதழ்களும், இனிய மொழிகளும் இப்போது என்னை வெல்லமுடியா. என்னைப் பொறுத்தமட்டில் அவை கவர்ச்சியை இழந்துவிட்டன. பாம்பின் பண்பை நான் கற்றிருக்கிறேன். உனது மயக்கும் மொழிகளுக்கு என் செவி கள் மூடப்பட்டுவிட்டன. நான் இளமையோடு இருந்த போது, எல்லோரும் என் ஆண்மையைப் பாராட்டி, பயந்து, சிறப்பித்து நின்றபோது, என்னை நீ மட்டுமே வெறுத் தாய். நீ மட்டுமே என்னை மதியாமல் நிலைதாழ்த்தி, விற்றுவிட்டாய். உன்னல் பார்வையிழந்து ஆதரவற்ற குழந்தைபோல், எளிதாக ஏமாறச் செய்து, சினமூட்டி, ஒதுக்கப்பட்ட என்னை இப்போது மட்டும் எப்படி நடத்திவிடப் போகிருய்? உன்மீது கொண்ட அளவற்ற ஆசையில்ை வாழத்துடித்த உன்னையே முற்றும் நம்பியிருந்தேன் ஆளுல் நீயோ என்னை அடிமையாய் மானக்கேடு செய்துவிட்டாய். மீண்டும் நான் எப்படி உன்னல் வஞ்சிக்கப்பட முடியும். ஏற்கெனவே என் சொற்