பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

திருவெம்பாவை விளக்கம்


8 திருவெம்பாவை விளக்கம்

ஆனால் அடிமுடி அறியவொண்ணாமல் திருவண்ணா மலையில் சோதிப் பிழம்பாய் எழுந்தருளிக் காட்சி தந்து கொண்டிருக்கும் தடங்கருணைப் பெருங்கடலாம் சிவ பெருமான், என்றும் எக்காலத்தும் குன்றாத ஒளியுடை யவன். பிறசோதிகள் மிகுங்காலத்தில் வெப்பந்தந்து உலக உயிர்களை மருட்டலாம்; வெருட்டலாம். ஆனால் அலகில் ேச |ா தி ய ன ய், அம்பலத்தாடுபவனாய் விளங்கும் அச்சிவபரம்பொருள் திருவண்ணாமலையில் நான்முகனும் நாராயணனும் பறந்தும் கீண்டியும் சென்றும் காணாமாட்டாத் திருமுடியையும், திருவடி யையும் உடைய சோதியனாய்ப் பொலிந்தான் என்பது புராண வரலாறு. எனவேதான் மணிவாசகப் பெருந். தகையார் ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி, என்று அக்கழகமோடமர்ந்த கண்ணுதற் கடவுளைக் குறிப்பிட்டார், இத்தகைய சோதியைச் சுடரொளி விளக்கை - பிழம்பை வைகறையில் துயிலெழுந்த மகளிர் புகழ்ந்து பாடிக் கொண்டே வீதி வழியே போகின்றார்கள். இவ்வாறு பாடுவதைக் கேட்டுக் கொண்டிருந்தும் ஒரு பெண் துயிலொழிந்து எழாமல் பொய்யுறக்கம் கொண்டு

நிற்கிறாள். அவளை அழைக்க வேண்டும், அன்பாக அழைக்க வேண்டும். ஆண்டவன் அருளைப் பெற்றுய்ய

போக்கும், அவள் நெஞ்சில் மகிழ்ச்சி சுரக்கும் போக்கில் * வாள் தடங்கண் மாதே’ என விளிக்கின்றனர். பெண் னிற்கழகே கண்கள். அக்கண்களும் காத ளவோடியிருக்க வேண்டும், அதுவே பேரழகு எனக் கழறுவர். விசாலமான அக்கண்களும் ஒளிபெற்றுத் திகழ்ந்தால், மீட்டும் மீட்டும். பார்க்கத் தோன்றும் வண்ணம் ஒளியுடன் கூடிய கவர்ச்சி. கொண்டதாயிருப்பின் அழகுக்கு அழகு என்றாகும். ஒளி வீசும் அகன்ற கண்களையுடைய பெண்ணே! இன்னும் நீ உறங்குகின்றாயே’ என்று மெல்ல அவள் செயலை அறிவுறுத்துகின்றார்கள். துயிலுதல் என்ற பொருளைத் தரும் கண் வளர்தல்’ என்ற சொல் கருத்தாழம்