உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக ஆட்சி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படை

115



குதல் உதிரப்பட்டி (உதிரம்-இரத்தம்) எனப்படும். சிறப்பு முறையில் தம் ஆற்றலை வெளிப்படுத்திய வீரர்கள் ஏளுதி, மாராயன் என்ற பட்டங்களைப் பெற்றனர்.

படை அமைப்பு

அரசனுடைய யானைப் படைக்கு ஒரு பெரிய தலைவன் உண்டு. இவ்வாறே ஒவ்வொரு படைக்கும் பெரிய தலைவன் இருந்தான். ஒவ்வொரு படையிலும் பல உட்பிரிவுகள் உண்டு. ஒவ்வோர் உட்பிரிவுக்கும் ஒரு சிறிய தலைவன் இருந் தான். இப்பலவகைப் படைகளும் சேர்ந்த அமைப்புக்குப் பெருந்தலைவன் ஒருவன் இருந்தான். அவன் சேனதிபதி தண்ட காயக்கன்,மகாதண்ட நாயக்கன்,தளவாய் எனப் பல காலங் களில் பலவாறு பெயர் பெற்றன். அவனுக்கு அரசாங்க விருதுகளும் மரியாதைகளும் உண்டு. அவன் ஒரு சிற்றரசனுக் குரிய தகுதியில் வாழ்ந்தான். அவன் சில சமயங்களில் முதல மைச்சனாகவும் இருந்தான். முதலாம் இராசேந்திரன் போன்ற இளவரசர்களே சில காலங்களில் அப்பதவிகளில் இருந்தனர். சில சமயங்களில் தண்ட நாயகப்பதவி மட்டும் தனித்து இருந்தது.

பேரரசன் படைகள்

பேரரசனது படை பயிற்சிப்பெற்ற படையாகும். அதன் சில பகுதிகள் பெருநாட்டின் எல்லைப் புறங்களில் குறிப்பிடத் தக்க இடங்களில் கோட்டைகளை அமைத்துக்கொண்டு நிலையாக இருந்து வந்தன. சில படைகள் உள்நாட்டுப் பகுதி களில் இருந்த கோட்டைகளில் ஆங்காங்கு இருந்து வந்தன, சில பகுதிகள் தலை நகரத்தில் இருந்தன. மற்றும் சில பகுதிகள் நாடு காவல் முதலிய பணிகளில் குறைகள் நேராமல் பார்த்து வந்தன. இப்படைகளெல்லாம் பண்பட்டவை.

1. 47 of 1928... 29. A. R. E. 1929, para 34.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/122&oldid=573640" இலிருந்து மீள்விக்கப்பட்டது