படை
103
குதிரைப் படை
சங்ககால அரசர் தேர்களில் காற்றைப்போலக் கடுகி ஒடத்தக்க குதிரைகள் இருந்தன என்பது முன்பு கூறப் பட்டது. அரசனுக்குரிய ஆட்சி மன்றக் குழுவினருள் குதிரைப்படைத் தலைவரும் பங்கு கொண்டிருந்தனர் என்று சிலப்பதிகாரம் செப்புகிறது. அவர்கள் இவுளி மறவர்’ எனப் பட்டனர். எனவே, சங்க காலத்தில் பண்பட்ட குதிரைப் படைகள் இருந்தன.-அப்படைகளுக்குத் த லே வர் க ள் இருந்தனர் என்பன இதனால் பெறப்படுகின்றன அல்லவா ? குதிரைகள் சிந்து, பாரசீகம், அரேபியா முதலிய நாடுகளி லிருந்து மிகப் பலவாகத் தமிழகத்தில் இறக்குமதி செய்யப் பட்டன.
பாண்டியனது அமைச்சரான மணிவாசகர் திருப்பெருந் துறையில் இறக்குமதியான குதிரைகளை வாங்க அரசாங்கப் பணத்துடன் திருப்பெருந்துறைக்குச் சென்றார் என்ற வரலாற்றுச் செய்தி, கி. பி. 9-ஆம் நூற்றாண்டிலும் பாண்டியர் குதிரைகளை வாங்கினர் என்பதை உணர்த்து வதாகும்.
கி. பி. 13-ஆம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டைப் பார்வையிட்ட மார்க்கோ போலோ என்பவர், பாண்டியன் ஆண்டுதோறும் இரண்டாயிரம் குதிரைகளை வாங்கி வந்தான். ஒவ்வொரு கப்பலிலும் பிற பொருள்களோடு குதிரைகளும் வந்தபடி இருந்தன. ஒரு குதிரையின் விலை ஏறத்தாழ 400 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை இருந்தது. தமிழகத்தில் வெப்பத்தாலும், வளர்ப்பு முறைத் தவற்றாலும் குேதிரைகள் அடிக்கடி நோயுறுதலும், இறத்தலுமாக இருந்தன.” என்று குறித்துள்ளார்.
1. F. N. of S. I. polity, pp. 166 - 168.