த. கோவேந்தன்
15
கொள்ளப் பாடுபடு. உன்னிடம் போட்டியிடுபவர்களைக் கூடாத முறைகளில் அழித்திட நினைக்காதே. அவர்களை நேர்மையான முறையில் வென்றிட உன்னை வளர்த்துக் கொள். நேர்மையே உனக்குப் புகழும், மகிழ்ச்சியையும், வெற்றியையும் தந்திடும்.
எதிரிகளின் அடக்குமுறைத் திட்டங்களை முறியடித்து தென்னை மரம்போல் உயர்ந்திடுவாய், பறவை போல நீ வையத்தை வலம் வருவாய்; செங்கதிரின் புகழ்போல் உன் கண்கள் ஒளி பெற்றிடும்.
உலகப்புகழ் அடைந்தவர்களைப் பற்றி இரவில் சிந்தித்து நல்ல பாதையில் பகல் முழுக்கப்பாடுபடு. உலகம் இருக்கும் வரை உன் புகழ் நிலைத்திடும்.
ஆனால், பொறாமைக் குணம் படைத்த வனின் நெஞ்சம் வெறுக்கத் தக்கது என்பதை மறந்துவிடாதே. அப்படிபட்டவனுக்குப் பிறர் அடையும் புகழ்கடிடத் தனக்குக் கேடு என்ற நினைப்பு வரும். அவன் நெஞ்சத்தில் பகையுணர்வு, பொறாமை எண்ணம் குடிகொண்டு, அவனை ஒய்வு பெறாத நிலையில் வாட்டி வதைக்கும். நல்லதற்கு அவன் மனத்தில் இடம் இருக்காது. தன்னைப் போலவே பிறரையும் நினைப்பான். உயர்ந்தவர்களைக் குறை கூறு வான்; பிறருடைய செயல்களை எப்போதும் குறை