டாக்டர் இராசமாணிக்கனும் 15
கத்தை வடமொழியில் இயற்றினன். மேலும் வ. மொழியில் சிறு நாடகங்கள் சில இராச சிம்ம பல்ல வன் காலத்தல் செய்யப்பட்டன. பக்தி இயக்கம் பரவத் தொடங்கிய அக்காலத்தில் சமயத் தொடர்பான நாட கங்கள் தலைத்துக்கின என்பது இதல்ை தெரிகிறது. கி. பி. 8-ஆம் நூற்றண்டில் செய்யப் பெற்ற உதய ணன் வரலாறு கூறும் பெருங்கதையிலும் நாடகம் பற்றிய செய்திகள் சில காணப்படுகின்றன:
“நயத்திறம் பொருந்த நாடகம் கண்டும்”
(1, 58, வரி 66.)
'நண்புனத் தெளித்த நாடகம் போல”
(3, 2, வரி 1.1
'வாயிற் கூத்தும் சேரிப் பாடலும் கோயில் நாடகக் குழுக்களும் வருகென”
(1.37, வரி 83, 89.)
கோயில்:நாடகக்குழு - அரண்மனையில் நடிப்போர் கூட்டம் என வரும் டாக்டர் உ. வே. சாமிநாதய்யர் அடிக் குறிப்புக் காணத்தகும். கி. பி. 8-ஆம் நூற் முண்டில் தமிழகத்தில் நாடகம் நடிக்க்ப் பட்டதையும், நாடகக் குழுவினர் இருந்ததையும் இவ்வரிகள் தெரிவிக் கின்றன அல்லவா?
கி. பி. 9-ஆம் நூற்ருண்டில் வாழ்ந்த மாணிக்க வாசகர், 'நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து,”
! பல்லவர் வரலாறு. பக். 109.