பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலமும் கவிஞர்களும் களின் தொண்டு ஒன்றிரண்டு கட்டுரைகளுடன் நின்று விட்டது. திரு. தெ. பொ. மீனுட்சிசுந்தரம் பிள்ளை கால்டுவெல் ஒப்பிலக்கணக்கில் வேர்ச் சொற்கள் ' (Roots) என்ற பகுதியை மொழிபெயர்த்துள்ளார். டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார் கரந்தைத் தமிழ்ச் சங்க வெள்ளி விழா மலரிலும், அண்ணுமலைப் பல்கலைக் கழகத்து ஆராய்ச்சி வெளியீடுகளிலும் இத்துறையில் சில கட்டுரைகள் எழுதியுள்ளார். திரு. Gågålosion offsir Words and their significance என்று ஆங்கிலத்தில் ஒர் அரிய கட்டுரை எழுதியிருக் கின்ருர். திரு. வே. வேங்கடராஜூலு ரெட்டியார் அவர்கள் மொழி சம்மந்தமாகப் பல அரிய கட்டுரைகளே எழுதியுள்ளார்கள். சென்னைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி வெளியீட்டில் அவை பதிப்பிக்கப் பெற்றுள்ளன. சில சொற்களைப் பற்றியும் சொல்லமைதியைப் பற்றியும் அவர்கள் கூறியுள்ள கருத்துக்கள் அவர்களது ஆராய்ச் யின் நுட்பத்தினைக் காட்டுகின்றது. டாக்டர் கால்டுவெல் அவர்களின் ஒப்பிலக் கணத்திலுள்ள மூவிடப்பெயர் ’’ என்ற பகுதியில் மட்டிலும் அவர்கள் அதிகக் கவனத் தைச் செலுத்தி அதைச் செவ்வனே ஆராய்ந்து பல ஆராய்ச்சிக் குறிப்புக்களுடன் 'திராவிட மொழியின் மூவிடப் பெயர்' என்ற ஆராய்ச்சி நூலே எழுதியுள் ளார்கள். அதில் கால்டுவெல் அவர்களின் கருத்துக் களுடனும் பிற அறிஞர்களின் கருத்துக்களுடனும் மாறு பட்ட கருத்துக்கள் வெளிப்படும்பொழுதுதான் திரு. ரெட்டியார் அவர்களின் நுண்மாண் நுழைபுல அறிவை யும் ஆராய்ச்சித் திறனையும் நாம் அறிய முடிகின்றது. இத்தகைய நூல்கள்தாம் இனி ஆராய்பவருக்குக் கண் திறக்கும் வழிகாட்டி நூல்களாம். திரு. ஞா. தேவநேயப் பாவாணர் இத்துறையில் ஒன்றிரண்டு நூல்களே வெளி யிட்டுள்ளார்கள்; மொழிநூல்பற்றிய அவருடைய அரிய