பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்

65


கூண்டைச் சுத்தம் செய்யச் சென்ற அதே சர்க்கஸ் கம்பெனியில், அவர் மிருகங்களை ஆட்டி வைப்பவராக நியமனம் பெற்றார். ஆனால், ஏற்கனவே இருந்தவர்களெல்லாம் மெச்சும்படியாக கிளைடுபெட்டி மிருகங்களை ஆட்டி வைக்கலனார். ஒரே சமயத்தில் 40 சிங்கங்கள், 6 புலிகள், சிறுத்தை, ஆடு முதலியவைகளை ஒரே கூண்டில் வைத்துக் கொண்டு ஆட்டிப்படைக்கத் தலைப்பட்டார். அத்துடன் நில்லாமல் சிங்கத்தின் வாயிலும் தன் தலையை விட்டுக் காட்டலானார். இதைக் கண்ணுற்ற பொது மக்களும், மிருகங்களை ஆட்டிவைக்கும் சர்க்கஸ் நிபுணர்களும் திகைத்தனர். கிளைடுபெட்டியின் புகழ் அமெரிக்காவில் மாத்திரமின்றி பல நாடுகளிலும் பரவலாயிற்று.

கிளைடுபெட்டி உயிரைப் பணயமாக வைத்தே சர்க்கஸ் தொழிலை செய்து வந்திருக்கிறார். அவருக்கு மிருகங்களால் அபாயம் ஏற்படாமல் இல்லை. சுமார் 24 தடவை கொடிய மிருகங்களின் வாயிலிருந்து அவர் தப்பியிருக்கிறார். அவர் உடலின் பாகங்களை எல்லாம் மிருகங்கள் கடித்திருக்கின்றன. அவற்றை அவர் பொருட்படுத்தவே இல்லை. மேலும் அவர் மிருகங்களை ஆட்டி வைக்கும்போது ஒரு ஒடிந்த நாற்காலி, சாட்டை, பயமுறுத்துவதற்காக வெடிச்சப்தம் கேட்கும் துப்பாக்கி ஒன்று இவைதான் வைத்துக் கொள்கிறார். இந்த நிலையில்

5