உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கள் பூசாவிதிகள் ΧΧΙ

என்னும் இத் திருவிருத்தங்களிற் கூறியபடியே நட்சத்திரப் பிரகாசம் மழுங்கி வருகிற பிராதகாலத்திலே சந்தி செய்பவர்கள் இருதைய கமலத்திலே அன்ன வாகனத்து மேலே பத்மாசனமும் நாலு முகமும் எட்டுக் கண்ணும் சிவந்த சடையும் சிவந்த வடிவும் சிவந்த ஆபரணாதிகளும் பூணுாலும் நான்கு கையும் வலக் கையிரண்டினும் உருத்திராக்க வடமும் சிருக்கு முத்திரை யும் இடக்கையிரண்டினும் தண்டுங் கமண்டலமும் எட்டு வயதான் வாலைப்பருவமும் சாத்விக குணமும் பிராமி என்னும் நாமகரணமும் உடையதேவியை அந்தச்சந்தியில் செய்யும் கன்மங்களுக்கெல்லாம்சாட்சியாகத்தியானிக்க.

இனி மத்தியான சந்தி செய்பவர்களான நிருவான தீட்சை பெற்றவர்கள் புருவ மத்தியாகிய விந்துத் தான்த் திலே கருட வாகனத்தின் மேலே கமலாசனமும் ஒருமுகம் இரண்டு கண்ணும் நாலுகையும் அவற்றில் வலக்கை இரண்டினும் அபயமும் தண்டாயுதமும் இடக்கை இரண்டிலும் வலம்புரிச்சங்கும் சக்ராயுதமும் பூணுாலும் துளப மாலிகையும் வெள்ளைநிறமும் வெள்ளை ஆடை ஆபரணாதிகளும் பதினாறு வயதுடைய யெளவனமும் இராட்சத குணமும் வயிணவி என்னும் நாம கரணமும் உடைய தேவியை அந்தச் சந்தியிற் செய்யும் கன்மங்களுக் கெல்லாம் சாட்சியாகத்தியானிக்க.

இனிச் சாயுங்காலமாகிய மாலையிற் சந்தி செய்பவர்கள் பிரமரந்திரத்திலே இடபவாகனத்தின் மேலே பத்மாசன்மும் ஒருமுகமும் மூன்று கண்ணும் பாலசந்திரனைத் தரித்திருக்கிற சடாபாரமும் நாலுகையும் அவற்றுள் வலக்கையிரண்டினும் வேலாயுதமும்