பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஐந்தாம் பத்து

153


ஆர்கலி வானம் தளிசொரிங் தாஅங்கு
உறுவர் ஆர ஒம்பாது உண்டு
நகைவர் ஆர நன்கலம் சிதறி 20

ஆடுசிறை அறுத்த நரம்புசேர் இன்குரல்
பாடு விறலியர் பல்பிடி பெறுக,
துய்வீ வாகை நுண்கொடி உழிஞை
வென்றி மேவல் உருகெழு சிறப்பின்
கொண்டி மள்ளர் கொல்களிறு பெறுக 25

மன்றம் படர்ந்து மறுகுசிறைப் புக்குக்
கண்டி நுண்கோல் கொண்டுகளம் வாழ்த்தும்
அகவலன் பெறுக மாவே என்றும் இகல்வினை
மேவலை யாகலின் பகைவரும்
தாங்காது புகழ்ந்த தூங்குகொளை முழவின் 30

தொலையாக் கற்ப நின் நிலைகண் டிகுமே
நிணம்சுடு புகையொடு கனல்சினம் தவிராது
நிரம்பகல்பு அறியா ஏறா ஏணி
நிறைந்து நெடிதிராத் தசும்பின் வயிரியர்
உண்டெனத் தவாஅக் கள்ளின் 35

வண்கை வேந்தே! நின் கலிமகி ழானே.

தெளிவுரை : கவரிமானது கொண்டை முடிபோல முடித்த உச்சிக் கொண்டையையும், கார்மேகம் போல விரிந்த கூந்தலையும் கொண்டவரான, ஊசலாட்டை விரும்புவோரான, செவ்விய இழைகளையணிந்த இளமகளிர், உரலைப் போற் பெருத்த கால்களையும், விளங்கும் கொம்புகளையும், பெரிய கைகளையும் உடையவான மதயானைகள் தாமிருக்கும் காட்டுப்பக்கத்தே புகுந்தனவானால், அவற்றுள் புதியவாய் வந்து இளங்களிறுகளாலே விரும்பப்படுகின்ற பிடியானைகளை மட்டுமே எண்ணிக் காண முயல்வர். அவற்றையே எண்ண முயன்றும், எண்ணிக் காண வியலாமையால், தாம் எண்ணிக் காணும் அந்த ஆர்வத்தையே சைவிடுவர். இத்தன்மையுடையதும், கடவுளர் தங்கும் நிலைகளையுடையதும் கற்களாலே உயர்ந்த நெடுவரைகளைக் கொண்டதுமான் இமயமலையே வடதிசை எல்லையாகத், தெற்கின்கண் குமரித்