பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம்-பொருளதிகாரம் سایه

எனத் தலைவியைத் தலைவன் விளித்துக்கூறலின் வழுவாயமைந்

திதி :

எல்லாநீ, முன்னத்தான் ஒன்று குறித்தாய்போற் காட்டினை நின்னின் விடாஅ நிழல்போல் திரிதருவாய் என் நீ பெறாத தீதென்" (கலி. 61)

எனத்தோழி தலைவனை விளித்துக் கூறலின் வழுவாயமைந்தது.

எல்லா விஃதொத்தன்' (கலி. 61) என்பது பெண்பால் மேல் வந்தது. ஏனைய வந்துழிக் காண்க. பொதுச்சொல் லென்ற தனானே எல்லா எலா எல்ல எலுவ எனவுங் கொள்க.

  • எலுவ சிறாஅர்" (குறுந் 129) என வந்தது. 'யாரை யெலுவ யாமே' (நற்றிணை, 395) எனத் தலைவனைத் தோழி கூறினாள்.

எலுவியென்பது பாலுணர்த்தலின் ஆராயப்படா. (2-4)

ஆய்வுரை :

இஃது அகத்தினையொழுகலாற்றில் இடம்பெற்று வழங்கும் முறைப்பெயரொன்றின் இயல்புணர்த்துகின்றது.

(இ - ள்.) முறைப்பெயரிடத்து இருபாலுக்கும் பொருந்தின தகுதியுடைய எல்லா என்னும் பொதுச்சொல் ஆண்பால் பெண் பால் ஆகிய அவ்விருபால்களுக்கும் ஒப்பவுரியதாகும். எ - று.

ஆடவர் மகளிர் என்னும் வேற்றுமையின்றி இருபாலாரும் ஒருவரையொருவர் அழைத்தற்குரிய அன்பின் கேண்மை முறைமை குறித்துவரும் பெயர் என்பது புலப்படுத்துவார் முறைப்பெயர் மருங்கின் கெழு தகைப்பொதுச்சொல்' என்றார். அச்சொல் அகத் திணை யொழுகலாற்றில் பயின்றுவரும் எல்லா' என்னும் சொல் என்பது தம் காலத்து வழங்கும் புலனெறி வழக்கினால் எல்லார்க் கும் நன்கு புலனாமாதலின் அதனைக் கிளந்தெடுத் தோதாது அதன் பொருளமைதியினைமட்டும் விரித்துரைத் தார் ஆசிரியர். தொல் காப்பியத்திற் சுட்டப்பெற்ற இச்சொல்வழக்கு, தொல்காப்பியத் திற்குப் பின்தோன்றிய சங்கச் செய்யுட்களிலும் இடம்பெற்றுள் ளமை இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் எடுத்துக்காட்டிய மேற்கோ ட் செய்யுட்களால் இனிது புலனாம்,