பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கருத்து வெளியீட்டில் புதுமை கம்பர் கருத்துகளை வெளியிடுவதில் சிறப்பான புதுமைகளைக் கையாண்டுள்ளார். இந்த அமைப்பு படிப்பதற்குச் சுவை பயக்கிறது. சில எடுத்துக் காட்டுகளைத் தரின் இது விளங்கும். - (ஊர் தேடு படலம்) புகழை வெண்ணிறமாக உருவகிப்பது மரபு, எனவே, இகழை-இகழ்ச்சியை இகழ்' என்று கூறாமல் வெண்மை நீங்கிய புகழ்' என்கிறார். (ஊர் தேடு படலம்-44) இராவணனுக்கு உரிய இயக்க மாதர் காம நோயால் வருந்தும்போது இசைக்கப்படும் யாழ் ஓசை தேள் கொட்டுவதுபோல் வருத்துகிறதாம் காம நோயின்போது இன்பப் பொருள்கள் எல்லாம் துன்பப் பொருள்களாகத் தோன்றுவதாகச் சொல்வது இலக்கியமரபு. அதன்படி இங்கே யாழோசை தேள் கடுப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. 'செவியில் புகும் நாமயாழ்த் தேளினால் திகைப்பு எய்து கின்றார் சிலர்’-இது பாடல் பகுதி. (ஊ தே. ப-175) திங்கள் நெருப்பை வீசுகிறது; மலர்கள் முள்ளாய்க் குத்து கின்றன என்றெல்லாம் கூறப்பட்டிருப்பதைப் பல இலக்கியங்களில் காணலாம். ஆனால் யாழிசை தேள் கடுப்பாயுள்ளது என்பது புதுமை தானே. இராவணன் கூடாத தனிமைக் காலத்தில், அரக்கியர் தனியாக இல்லாமல் ஒரு துணையோடு உள்ளனராம்.