பூங்குன்றனர் பொன்மொழிகள்
39
.
செய்தவர்; உள்நாட்டு வாணிகத்திலும் வெளி நாட்டு வாணிகத்திலும் சிறந்த பழக்கம் உடையவர். அவர் கள் வாணிகத்தின் பொருட்டுக் கடல் கடந்து பல நாடுகளுக்கும் சென்றனர். அங்கங்குத் தங்கி அவ் வந் நாட்டு மக்களோடு பழகித் தங்கள் வாணிகத் தைப் பெருக்கினர். அயல் நாடு செல்வோர் அந் நாட்டு மக்களோடு அகங்கலந்து பழகினுற்ருன் வாணிகம் சிறந்த முறையில் நடைபெறும். அந் நாட்டு மொழியையும் ஓரளவு அறிந்து அம்மக்க ளோடு பேசி அம்மக்கள் உள்ளத்தைத் தம்பால் ஈர்க்க வேண்டும். இத்துறைகளில் எல்லா பண் பட்ட தமிழ் வணிகர் தம் நாட்டைப்போலவே, தாம் தங்கி வாணிகம் நடாத்திய பிற நாடுகளையும் மதித் தனர்; அம்மதிப்பு மிகுதியாற்ருன் பல நூற்ருண்டு கள் பல நாடுகளோடு வாணிகத் தொடர்பு வலுப் பெற்று வந்தது. தமிழகத்துச் செல்வ நிலைக்கு இவ்வயல் நாட்டு வாணிகம் ஒரு சிறந்த காரண மாகும். இந்த உண்மையைத் தமிழ் மக்கள் நன்கு அறிந்திருந்தனர்; அயல் நாட்டு வணிகரைத் தம் நாட்டில் வாழ்வித்தனர்; வசதிகள் அளித்தனர்; நன்கு கலந்து பழகினர். சீனர் அராபியர் யவனர் முதலிய பல நாட்டாரும் சங்ககாலத் தமிழகத்தில் தங்கி வளமுற வாழ்ந்தனர் என்பதைச் சங்க நூல் களால் அறிகின்ருேம். அயல் நாட்டார் குறிப்புக் களும் இவ்வுண்மையை வலியுறுத்தும் சான்ருக நிற்கின்றன. இந்த உண்மையை உளம் கொண்ட கணியன் பூங்குன்றஞர் என்ற புலவர், "யாதும் ஊரே,யாவரும் கேளிர்” என்று சுருங்கக் கூறினர்.
இவ்வுயரிய கருத்து இன்று ஈழம், பர்மா முதலிய நாடுகளுக்கு இல்லாது ஒழிந்தது வருந்தத் தக்கது. தமிழ் வணிகர் அந்நாடுக்ளில் படும் துன்பம் சொல் லக் கூடவில்லை. ஆனுல் வந்தவர்க் கெல்லாம் வாழ் வளித்த தமிழ்நாடு, இந்த விரிந்த மனப்பான்மை யால் இன்றும் வடநாட்டவர்க்கும் அயல்நாட்டவர்க்
கும் வாழ்வளித்து வருகின்றது. இது பிற நாட்டார்