பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

41



மேருமலையைத் தாக்கி வழி மாற்றினான் என்ற கதையைக் கேட்டிருக்கிறாள். அதை எடுத்துக் கூறி அவனை உயர்த்திப் பேசினாள். பண்டைப் பெருமை கேட்டுப் பாண்டியன் மனம் குளிர்ந்தான்.

அடுத்து அவள் சேரனைக் காட்டினாள். அவன் வில் அம்பு அவள் நினைவுக்கு வந்தது. அதுவே அவன் கொடிப் பெருமை என்று கூறினாள். சேரன் தான் வீரன் என்பதைக் கேட்டு அவன் உள்ளம் மகிழ்ந்தான். தமயந்தியின் முன் தன்பெருமை பேசப்பட்டதே தனிப்பேறு என்று கொண்டான். குன்றுகளில் அருவி பாயும் நாடன் சேரன் என்றாள். தனிக்கொடியின் மீது சிலை உயர்த்த வேந்து என்று பேசினாள்.

யதுகுல வேந்தன் அடுத்து அமர்ந்திருந்தான். கடற் கரையில் நின்றபோது அவன் காலில் அலைகள் வந்து மோதின என்றும், இசை மன்றத்திற்குத் தலைமை தாங்கினான் என்றும், பாண்டவர்க்காக தூது நடந்தான் என்றும், பாரதப் போரை முடித்தவன் என்றும் அவன் பெருமைகளைப் பேசினாள்.

குருநாட்டுக் கோமான் இவன் என்று அடுத்து இருந்தவனைச் சுட்டிக் காட்டினாள். செங்கழுநீர் மொட்டு அதனைப் பாம்பின் தலை என்று கருதிக் குருகுக் குஞ்சு அஞ்சி அலறியது; அதனை அமைதிப்படுத்தத் தாய்க் குருகு இரவு எல்லாம் தாலாட்டியது. அத்தகைய சிறப்பு உடையது குருநாடு என்று கூறினாள்.

சங்கு ஈன்ற முத்தினைத் தாமரை இலை தாங்கியது; அத்தகைய சிறப்பு உடையது மந்திரநாடு என்று அவ் வரசனைச் சிறப்பித்தாள்.

கருப்பஞ்சாறு பாய்ந்து நெற்பயிரை விளைவித்தது; அதன் தாளினை எருமைகள் கறித்துத் தின்றன. அதன்