உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

இலக்கிய அமுதம்


புத்தாடையணிந்து மணப் பந்தலில் அமர்ந்தாள். பின்பு சுற்றத்தார் விரைந்து வ்ந்து, "பெரிய மனைக் கிழத்தி ஆவாய்,” என்று வாழ்த்தினர். அன்று இரவு

மணமக்கள் ஒன்று கூடினர்.

'உழுந்துதலைப் பெய்த கொழுங்களி மிதவை

பெருஞ்சோற் றமலை நிற்ப நிரைகால் தண்பெரும் பந்தர்த் தருமணல் ளுெமிரி மனேவிளக் குறுத்து மாலை தொடரிக் கனேயிருள் அகன்ற கவின்பெறு காலேக் கோள் கால் நீங்கிய கொடுவெண் டிங்கள் கேடில் விழுப்புகழ் நாடலே வந்தென உச்சிக் குடத்தர் புத்தகல் மண்டையர் பொதுசெய் கம்பலே முதுசெம் பெண்டிர் முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தாப் புதல்வற் பயந்த திதலையல் வயிற்று வாலிழை மகளிர் நால்வர் கூடிக் கற்பினின் வழாஅ நற்பல உதவிப் பெற்ருேற் பெட்கும் பிணையை யாகென நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க, வதுவை நன்மணம் கழிந்த பின்றைக் கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து பேரிற் கிழத்தி யாகெனத் தமர்தர * ஒரிற் கூடிய உடன்புணர் கங்குல்.’

(அகம்.86)

(2) திருமண நாளன்று இறைச்சியுடன் கூட்டி. ஆக்கிய நெய்மிகுந்த வெண்சோறு மணத்திற்கு வந்த அனைவருக்கும் படைக்கப்பட்டது. பின்பு சந்திரனும் உரோகிணியும் கூடிய நல்ல நேரத்தில் மணவரையில் கடவுள் வழிபாடு நடைபெற்றது. முரசம் முதலிய வாத்தியங்கள் ஒலித்தன. முன் சொன்ன முறைப்படி மணமகள் மணநீராட்டப் பட்டாள். மணமகள் தூய உடையிற் பொலிந்தாள். அப்பொழுது சுற்றத்தார் அவளை வாழ்த்தி மணமக. னுக்குக் கொடுத்தனர்.