உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 திருவெம்பாவை விளக்கம்

உணத் தருவன்’ என்று ஆசை காட்டி, மொய் பவளத் தொடு தரளம் துறையாரும் கடற்றோணி புரத்தீசன் பிறை யாளன் நாமம் எனக் கொருகால் பேசாயே’’ என்று சிவம் பெருக்கும் திருஞான சம்பந்தர் - நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தர் பாடினார். அடுத்து, * தென்னவனே என்று கூறி முடிப்பதற்குள் நெருப்பி னிடைப்பட்ட மெழுகுபோல் உருகு வாய்’ என்று மேலும் கிளத்தும் பாங்கில் தென்னாவென்னா முன்னந் தீசேர் மெழுகொப்பாய்’ என்கின்றனர் கன்னிப் பெண்டிர். ‘தென்னா’ எனும் சொல் தென்னவனைக் குறித்து நின்றது. தென்னவன் பாண்டியன். சிவபெருமான் ஒரு ஞான்று பாண்டி நாட்டை அங்கயற்கண்ணி அம்மை யாரோடு அரசர் பெருந்த கையாக ஆண்ட காரணம் பற்றித் தென்னவன் எனச் சிவன் குறிக்கப் பெற்றார். *தென்பாண்டி நாடே சிவலோகம் என்று:முன் வாதவூரர் மொழிந்தார்’ என்று பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்களும் தம் மனோன்மணியத்திற் குறிப்பிட்டுள்ளார். * தென்னவன் எனையாளும் சிவனவன்’ ’ என்பது திருநாவுக்கரசர் திருவாக்கு. தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்பது சைவப் பெருமக்களுக்கு மணிவாசகர் வழங்கிய தாரக மந்திரமன்றோ? தமக்கு வேண்டியவர் திருப்பெயர் கேட்டவுடனேயே உள்ளம் நெக்குருகி நிற்றல் என்பது பேரன்புடையார் மாட்டுக் காணும் செயலாகும்.

முன்னம் அவனுடைய நாமங்கேட்டாள் மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள் பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள் அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தைத் தன்னை மறந்தாள் தன்ங்ாமங் கெட்டாள் தலைப்பட்டாள் கங்கை தலைவன் தாளே