பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அருணிதி கலியன்

அருணிதி கலியன் என்பான் முதற் பராந்தகன் என்னும் சோழ அரசனுடைய அதிகாரிகளில் ஒருவன். இவன் சோழ நாட்டவன் ; மருதூர் என்னும் ஊரவன் ; மருதூருடையான் அருணிதி கலியன் என்றும் கூறப்பெறுபவன். இவனைக் குறித்து முதற்பராந்தக சோழனுடைய ஆனைமலைக் கல்வெட்டால் அறியப்பெறுகின்றது. அக்கல்லெழுத்துப்பகுதி வருமாறு :-


"மதிரை[1] கொண்ட கோப்பரகேசரி[2] பன்மற்கு யாண்டு முப்பத்து மூன்றாவது இவ்வாண்டு தேவதானம்[3] கீழிரணிய முட்டத்துப்[4] படும் பிரமதேயம்[5] நரசிங்க மங்கலத்துச்[6] சபையோம் சோழப் பெருமானடிகள்


  1. மதிரை - மதுரை.
  2. பரகேசரி, ராசகேசரி என்பன சோழவரசர்கள் மாறி மாறிப் புனைந்துகொண்ட பட்டப் பெயர்கள்.
  3. தேவதானம் - கோயில்களுக்கு விடப்பட்ட இறையிலி நிலம்.
  4. கீழிரணியமுட்டம் - ஆனைமலையைச் சுற்றியுள்ள பகுதி, இரணியமுட்டத்துப் பெருங்கௌசிகனார் என்ற புலவர் கடைச்சங்க காலத்தவர் ; மலைபடுகடாம் என்ற நூலின் ஆசிரியர். இரணியமுட்டம் என்ற நாட்டின் பகுதி சங்க காலத்திலேயே இப்பெயரோடிருந்தமை இப்புலவர் பெயரான் அறியப்பெறும்.
  5. பிரமதேயம்-அந்தணர்களுக்கு விடப்பெற்ற இறையிலி நிலம்.
  6. நரசிங்கமங்கலம் - ஆனைமங்கலத்துக்கு ஒரு பெயர்