22
கலம் நெல் வரவு வந்தது. திரைமூர் தேவதானம் இருபதிற்று வேலியும் குடிநீக்கிற்றில்லை என்று கூறி 800 கலம் நெல் கொடுக்கப்பெற்று வந்தது. சிற்றிங்கண் உடையான் திரைமூரைத் தேவதானமாக்கிய மூல வோலையை வருவித்தான்; குடி நீக்கி என்பதைக் கண்றிந்தான் ; இனி அடை ஓலைப்படி திருவிடைமருதன் என்னும் மரக்காலால் 2800 கலமும், பஞ்சவாரமாக 260 கலமும் கொடுத்துவரல் வேண்டும் என்று உத்தரவிட்டான்; இதுகாறும் கொடுக்காத தொகையை முதற் பொருளாக்கி, அம்முதற் பொருளினின்று கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, படிமாற்றை மிகுவித்தான். இங்ஙனம் கோயில் கணக்குசளை நன்கு ஆய்ந்து, கோயில் வருமானத்தை மிகுவித்துப் படிமாற்றை அதிகரித்தமை, இச்சிற்றிங்கணுடையானின் இறைபணி நிற்றலில் பொறுப்புணர்ச்சியை நன்குணர்த்தும்.
அன்னம் பாலிப்பு
கும்பகோணத்திலுள்ள நாகேசுவரசுவாமி கோயில் குடந்தைக் கீழ்க்கோட்டம்[1] எனப்பெறும். அங்கு இரண்டாம் ஆதித்தனின் மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்று[2] கிடைத்துள்ளது. திருக்குடந்தைச் சபையினர் சிற்றிங்கணுடையானுக்கு நிலம் விற்றனர். அந்நிலவருவாய் கொண்டு, வேதம் வல்ல அபூர்விகள்[3]