கருணாகரத் தொண்டைமான்
123
வெற்ற லேழத்தொடு பட்டு மற்றவர்
கருந்தலை யோடு வெண்ணிணங் கழுகொடு
பருந்தலைத் தெங்கணும் பரப்ப வயர்த்துத்
தருங்கட லாடைத் தராதலத் திறந்து
கலிங்க மேழுங் கைக்கொண் டொருபகல்
.........
வீரசிம் மாசனத்து வீற்றிருந் தருளின
கோவிராச கேசரி வன்மரான......
ஸ்ரீகுலோத்துங்க சோழதேவர்க்கு-” [1]
இப்பகுதியிலிருந்து கருணாகரன் சேனையுடன் எதிர்த்துப் பட்ட கலிங்க சேனாபதிகள் இன்னாரின்னார் என்பதை அறியலாம். ஆனால் சில பெயர்கள் தெளிவாக அறியக்கூடவில்லை. அபயனது ஏனைய கல்வெட்டுக்கள் யாவும் கலிங்க வெற்றியை பொதுவாகத்தான் சிறப்பித்துக் கூறுகின்றன, இக்கல்வெட்டு மட்டிலுந்தான் விவரமாகச் சிறப்பித்துக் கூறுகின்றது. இதனுள் காணும் எங்கராயன் தான் கருணாகரனை எதிர்க்காது அவனுடன் சந்து செய்து கொள்ளும்படி கூறினவன். இது,
என்று கூறவே யெங்க ராயனான்
ஒன்று கூறுவன் கேளென்று ணர்த்துவான்
என்ற பரணித் தாழிசையால் அறியப்பெறுகின்றது.
மேற்கூறிய கல்வெட்டினால் குலோத்துங்கனது. 45-ஆம் ஆட்சி ஆண்டிற்கு முன்பு கி. பி 1115) கருணாகரனது படையெடுப்பு நடந்திருக்கவேண்டு மென்பது பெறப்படும்.
குலோத்துங்கன் மகனான விக்கிரம சோழன் அக்காலத்தில் இளவரசனாக இருந்தனன் என்றும்
- ↑ S.I.I.IV-P. 15 தாழிசை-378