12 து. சகதேவன் சூழ்ச்சி ]1۔ ٹیم تہو னேன் இந்த அாவான் உயிரோடி ருந்தால் நம்மை யெல்லாம் பாதிநாளில் படுகுரணமாக்கி விடுவான் என்று பயந்து இந்த யுக்தி எடுத்தாற் போலிருக்கிறது; இது வரையில் இந்த மண்ணைக் கட்டிக்கொண்டு ஆண்டது போதாது, குலத்திற் பிறந்த பிள்ளையைப் பலி கொடுத் தாவது இன்னமும் இப்பாரை ஆளவேண்டுமென்று ஆசை யிருக்கிருற்போலிருக்கிறது வாய் கூசாமல் இவ் வார்த்தையைக் கேட்டீரே இவ்வளவு கஷ்டமேன் உமக்கு இந்தப் பாழும் பூமியைத் தானே ஆளவேண் டும் நீர் வாரும் என்னுடன், என் பெரிய தந்தையிடம் அழைத்துச் செல்லுகிறேன், வாரும், அவரிடம் போய் தேகியென்று கையிாந்து கேளும், இப்பார் முழுவதும் உமக்கு தானமாகக் கொடுப்பார் பாரும், ஒரு காலும் என்னுயிர் உள்ளளவும் அதற்கு உடன் படேன். என்னுயிரைக் கேட்க மாத்திரம் உடன்பட்டீர் போலும்! -பெரிய அப்பா ! அப்படியே ஆகட்டும். வணங்க முடி மன்னனெனப் பெயர் பெற்ற நீர் உமது தலையை வணக்கி என்னிடம் கையிாந்து கேட்க நான் மறுக்க மாட்டேன். அன்றியும் நான் கொடுத்த வாக்கினின்றும் தவறமாட் டேன். - சந்தோஷம்-அப்பா, எப்பொழுது நீ களபலிக்கு வா வேண்டுமென்பதை நான் நாளை சொல்லி யலுப்புகி றேன். நீ உன் வார்த்தை தவருமல் வந்து சேரவேண்டும். அப்படியே ஆகட்டும். ஆயினும் பெரிய அப்பா, ஒன்று ஞாபகமிருக்கட்டும். நீரிற்குமிழியாக்கை என்பது போல் நிலையற்றது இத்தேகம். அது வரையில் இவ்வுடல் என் னுடையதாயிருந்தால் அதற்குடன் படுகிறேன், சம்சயம் வேண்டாம்-பெரிய அப்பா, உமது மனோதம் பூர்த்தி யாயிற்ரு? இனி விடை பெற்றுக் கொள்ளலாமே! சரி, நான் வருகிறேன். (புறப்படுகினன்.)
பக்கம்:Sahadeva's Stratagem.pdf/18
Appearance