உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

VIII சித்தர்கள் பூசாவிதிகள்

மார்புக்கு உருத்திரனும், வல இடத் தோள்களுக்கு அச்சுவனித் தேவர்களும், சிரசுக்கு விஷ்ணுவுமாக அவ் வவ்விடங்கட்கு அதிதேவதைகளாய் அவ்வவ்விடங் களிலே வீற்றிருப்பார்கள்.ஆதலால்தொடுமிடந்தொடுவது அந்தந்தத்தான்ங்களுக்குசுத்தியும், அந்தந்ததேவர்கட்குப் பிரீதியுமாம்.

இவ்வாறு ஆசனமஞ் செய்த பின்பு கரசோதனை செய்க. 'ஓம் அஸ்திராய பட் என்று இடக்கையினால் வலக்கையின் உள்ளையும் புறத்தையும் துடைப்பதே கர சோதனையாகும். -

விபூதி சுத்தி பத்ம சுத்தி எனவும்படும். வலக்கைப் பெருவிரல் நடுவிரல் அணிவிரல்களாகிய மூன்று விரல்களையுங் கூட்டி நீட்டி மற்ற இருவிரல்களையும் மேலாக நிமிர்த்து மிருக முத்திரையால் திருநீற்றை எடுத்து இடக்கையில் வைத்துக் கொண்டு இராட்சதர் நிமித்தமாக நிருதி கோணத்தில் அஸ்திராயவும் பட் என்று தெறித்துப் பின்பு நாற்சுத்திசெய்து வலக்கையால் மூடிக்கற்பாதிதிருநீற்றைச் சங்கீதா மந்திரமெனப்படும் ஈசானாதி பதினொரு மந்திரத்தினாலும் கற்பமுறையில்ஆக்கப்படாததிருநீற்றை நிவிர்த்தியாதி பஞ்சகலா மந்திரங்களினாலும் சங்கிதா மந்திரத்தினாலும் அபி மந்திரித்து இந்த விபூதிக்கு அதிதேவதை மூன்று சிரசும் ஒன்பது கண்ணும் மூன்று கையும் மூன்று பாதமுமாக இருக்கிற காலாக்கினி உருத்திரராகப் பாவிப்பதாகிய இதுவே விபூதி சுத்தியாம்.