பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

66

பதிற்றுப்பத்து தெளிவுரை

 பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக் கெளதமனார் பாடினார் பத்துப் பாட்டு.

அவைதாம்,

(1) அடுநெய்யாவுதி, (2) கயிறுகுறு முகவை, (3) ததைந்த காஞ்சி, (4) சீர்சால் வெள்ளி, (5) கானுணங்கு கடுநெறி, (6) காடுறு கடுநெறி, (7) தொடர்ந்த குவளை, (8) உருத்துவரு மலிர்நிறை, (9) வெண்கை மகளிர், (10) புகன்ற வாயம். இவை பாட்டின் பதிகம்.

தெளிவுரை: இமய வரம்பன் நெடுஞ்சேரலாதனின் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன். அவன், உம்பற் காட்டுப்பகுதியை அது தன் ஆணைக்கு அடங்கி அமைந்துவருமாறு, அவ்விடத்தே தன் ஆட்சியை நிறுவியவன்; 'அகப்பா' என்னும் கோட்டையை அழித்து, ஒரு பகற்போதிற்குள்ளாகவே அதனைத் தீயிட்டுக் கொளுத்தியவன். தன் அறிவோடு ஒத்திருந்தாரான முறைமையுடைய பெரியோரைத் தழுவிக்கொண்டு அரசாண்டவன். இடமகன்ற நிலப்பரப்பை யுடைய தன் நாட்டு நிலத்தைத் தன் நாட்டவருக்கு அவரவர்க்குரிய எல்லையை அளந்து வகுத்துக்கொடுத்து ஒழுங்கு செய்தவன். கருமையான களிற்றியானைகள் பொருந்திய தன் களிற்றுப்படையை நெடிதாக்கி, மேல்கடலும் கீழ் கடலும் என்னும் இருகடல் நீரையும் ஒரு பகற்காலத்துள்ளேயே அவற்றின் மூலம் கொணர்ந்து, அயிரை மலையிடத்தே கோயில்கொண்டிருந்த தேவியை நீராட்டி வழிபட்டுப் போற்றியவன். ஆற்றல்மிகுந்த வல்லமையோடு, குறைவற்ற நற் புகழைக்கொண்டு விளங்கியவன். உயர்ந்த கேள்விஞானத்தைப் பெற்றவரான நெடும்பாரதாயனார் என்னும் முனிவர் முன்னின்று வழிகாட்டத், தன் இல்லறத்தைத் துறந்து, துறவுபூண்டு காட்டிற்குச் சென்று தவமியற்றியவன், இத்தகையானாகிய பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக் கெளதமனார் பத்துப்பாட்டுக்களால் போற்றிப் பாடினார்.

சொற்பொருளும் விளக்கமும் : அமைவர - அமைந்துவர; அஃதாவது, அவ்விடத்துள்ள எதிர்ப்புக்களை அழித்து வெற்றி கொண்டு என்பதாம். 'உம்பற்காடு சேரநாட்டின் ஒரு பகுதி; 'காடு' என்னுஞ் சொல் அப் பகுதியின் முல்லைநிலப் பகுதியாகிய தன்மையை விளக்கும். ஊழ்தல் . பொருந்