197
வடுகர், பம்பை எனும் பறையொலிக்க; வன்மை மிக்க நாய்கள் உடன்வர, மயிற்தோகை கட்டப்பட்ட வில்லோடும்,அம்போடும் திரிவர். அண்டை நாடுகளுட் புகுந்து, காவற் படையினரை அழித்து ஆனிரைகளைக் கவர்ந்து வருவர்.40
தமிழகத்தை வெல்ல எண்ணிப் போந்த வடபுலத்து மோரியர் படைக்குத் துணை நின்றனர். வடுகர் மோரியர் படைக்குத் துளசிப் படையாய் வந்த வடுகர் படையும் மோகூர் களத்தில் தோற்று அழிந்தது.41
நன்னன் ஆண்டிருந்த பாழி நகரையும் கைப்பற்றி சில காலம் வடுகர் ஆண்டிருந்தனர். அது கண்ட சோழன் இளம் பெருஞ் சென்னி என்பான், தன் யானைப் படைகொண்டு பாழியின் அரண் அழித்தான். வடுகரை வென்று துரத்தி பாழியைக் கைப்பற்றினான்.42
7. வேளிர்
சங்க கால தமிழகத்தில் வாழ்ந்த தொன்மைமிகு குடிகளுள் ஒன்று வேளிர் குடி. வேளிர் மரபு தோற்றம் குறித்து பல கருத்துக்களும், கதைகளும் நிலவுகின்றன. அகத்தியருடைய துணைவர்களாக த மி ழ கம் வந்தவர்கள், கண்ணன் வழியினராய், துவாரகையாதவ குலத்து வந்தோராவர் என்று கூறுவரும் உளர். வேளிர்க்கும் அக்கதைகளுக்கும் தொடர்பு இல்லை என்று மறுப்பாரும் உள்ளனர்.43
வேளிர் குடிப்பிறப்பு குறித்து கருத்து வேறு வேறாக இருப்பினும், வேளிர் குடி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த் குடி, என்பதில் யாருக்கும் கருத்து வேற்றுமை இருக்க முடியாது.
12