பக்கம்:உத்தரகாண்டம்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

292   ✲   உத்தரகாண்டம்


கல்பட்ட நாய்க்குட்டி போல சுருண்டாலும் சமாளிக்கிறாள்.

“இல்லீங்க டாக்டரம்மா, அவங்க டிரஸ் பண்ணிட்டாங்க. சாத்துன.”

“ஆமாமாம். எல்லாத்துக்கும் பதில் வச்சிருப்பியே! இவங்க பதினெட்டு வயசுப் பருவம். கதவ சாத்தினாளாம். போ, போ, அந்த வூட்ல இருக்கறவ, இங்க எதுக்கு வரணும்? இங்க குருவம்மா, லச்சுமி ஆரானும் பாத்துப்பாங்க, நீ வாயக்கய்யப் பொத்திட்டுப் போ!” இவள் சுருண்டு போகிறாள்.

சந்திரியா! நர்ஸ் வேலைக்குப் படித்த அந்த சந்திரியா! கனடாவிலோ அமெரிக்காவிலோ யாரையோ கொச்சிக்காரனை கல்யாணம் பண்ணிக் கொண்டாளாம்...

“யம்மா, இங்க வர வேலைக்காரிங்ககிட்ட நீ எதும் பேச்சு வச்சிக்காத. வயசு காலத்துல நீ தனியா இருக்கக் கூடாது. பெத்தவ பிச்சை எடுக்கிறா. இவன் ஏ.ஸி. காரில போறான்னு எதிர்க்கட்சிக்காரன் மேடை போட்டு அசிங்கமா பேசுறான். இப்பக்கூட, அடியாள் சுவாமியப் பாத்து ஒரு பூசை வைக்கத் தான் போயிட்டு வரேன். மாத்ருசாபம், பித்ருசாபம் இருக்குன்னு சொன்னாரு. அருள் வாக்கா வந்திட்டதேன்னு கவலையா இருக்கு...”

“உன் தம்பியாண்டானுக்கு இதிலெல்லாம் இப்ப ரொம்ப நம்பிக்கை வந்திட்டாப்பல போல.” இடக்காக அவள் உதிர்த்த சொற்கள் குத்திவிடவில்லை.

“ஆமா, எல்லாரும் எப்பவும் ஒரே மாதிரி இருக்காங்களா? காலத்துக் கேத்த மாதிரி மாற வேண்டியிருக்கு. உன் காலத்துல இருந்த காங்கிரசே இன்னிக்குப் பொய் பித்தலாட்டத்திலும், சூதிலும் அடுத்தவங்க காலை வாரி விடுறதிலும் தான் புழச்சிருக்கு. அன்னிக்கு ராட்டை நூத்திங்க. இப்ப யாரு செய்யிறாங்க? கூலிக்கு மாரடிக்குற ஆளுகதா-நீராரம் சாப்பிட்ட சேரி ஆளுவ, ரசனா, கோலா, பெப்சி கேக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/294&oldid=1050395" இலிருந்து மீள்விக்கப்பட்டது