அவலம் 11 உலகிடைத் தோன்றிய இலக்கியங்கள் எல்லா வற்றிற்கும் பொதுவானவையே எக்காலத்தும் தோன்றும் இலக்கியம் அனைத்திற்கும் அப்பொது நியதிகள் பொருந்துபவை. அவற்றுள் சிலவற்றை ஈண்டுக் காண்போம். அவலம் நடைபெறுவதற்கு இன்றிமையாது வேண்டப் படுவது 'முரண்' (Conflict) என்று சொல்லப்படுவது. இரண்டு வேறுபட்ட கருத்துகள் உள்ள பொழுதே முரண் ஏற்படும். இக்கருத்துகள் தனித்தனி இயங்குகிற வரையில் போராட்டம் இல்லை. ஏதோ காரணத்தால் இவை ஒன்றற்கொன்று எதிர்ப்படின் அவற்றினிடையே முரண்பாடு தோன்றுகிறது. கருத்துகள், எண்ணங்கள், ஆசைகள், குறிக்கோள்கள் என்ற இவற்றினிடையே முரண்பாடுகள் உண்டாதல் இயல்பு. தனிக் குணங் களாக இவை நிற்பின் முரண்பாட்டிற்கு வேலை இல்லை. அதற்கு மறுதலையாக இப்பண்புகளை மேற் கொண்ட மக்கள் தம்முள் முரண்பாடு கொள்ளு கின்றனர். இவற்றுள் ஒன்றோ அன்றிப் பலவோ முரண்பாட்டிற்குக் காரணமாகத் திகழலாம். இவ்வாறு முரண்படும் கருத்துகளையுடைய மக்கள் சாதாரண மக்களாயின் அம்முரண்பாடு நிலைத்து நிற்பதில்லை. ஆனால், அவற்றையுடையார் வலுவுடையாராயின் தாங்கள் கொண்ட கருத்துக்காகப் போரிடுகின்றனர். இப்போராட்டத்திலிருந்து தோன்றுவது அவலம். அவலம் என்பது போராட்டத்தில் ஏற்படும் துன்பத்தின் சரிதை என்பதைப் பலரும் அறிவர். போராட்டம் என்றாலே துன்பந்தான் விளைவாக இருக்கும். ஆனால், வெறுந் துன்பம் மட்டும் அவலம் என்று கூறப்படுவதில்லை. அப்படியானால்
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/30
Appearance