பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
– 48 —

துணையன்பிற்கு எடுத்துக்காட்டாக இப்பறவையே இலக்கியத்தில் சொல்லப்படுகின்றது. இக்காலத்திலும் மணமக்களுக்கு ஆசி வழங்குகின்வறர்கள் "அன்றில் போன்று இணைபிரியாது வாழ்விர்களாக,” என்று வாழ்த்துகின்றனர். இதிலிருந்து ஆண் பறவையும் பெண் பறவையும் எப்பொழுதும் இணைபிரியாது சேர்ந்தே வாழும் என்று தெரியவருகின்றது.

ஒன்றைவிட்டு ஒன்று பிரிந்தால் வருந்திப் பன்முறை கூவி இறந்துபடும். பிரியாது வாழும் இப்பறவையினை இதன் காரணமாய் பகன்றில் எனவும் பகான்றில் எனவும் சொல்லுவர். அன்றில் என்ற சொல்லும் இக்கருத்து அமைந்தே காணப்படுகிறது. இச்சொல்லினை அன்றி+இல் எனப் பிரித்தால், ஒன்று இல்லாமல் மற்றொன்று உயிர் வாழாது என்னும் பொருளைப் பெறுகின்றோம். கார் காலத்தில் சேவல் தன் பெடையுடன் எப்பொழுதும் இடையுறாது இணைந்து இருக்கும். தன் பெடையைக் காணாவிடில் சேவல் எழுந்து அலமந்து கூவும். அது தன் பெடையுடன் கூடித் துயிலுங்கால் இடையிடையே விழித்துத் தன் துணை அருகில் இருக்கின்றதா எனப் பார்க்கும்.

அன்றிலும் அழகியும்

ஆரணங்கு ஒருத்தி தலைவனைப் பிரிந்து அதன் காரணமாய் மெலிவுற்று வருந்தி வாழ்கின்றாள். இத்தகைய தலைவியின் நிலை கண்டு அன்றில் இரங்கி வாளாயிருப்ப காகப் புலவர் ஒருவர் சுவைபடப் பாடியுள்ளார். ஆரணங்கை நோக்கி அன்றில், "நான் என் துணைவனைப் பிரியாது இன்பமுடன் வாழ்கின்றேன். நீயோ உனது துணைவனைப் பிரிந்து துன்பத்தால் வருந்துகின்றாய்.