தன் இரக்கம் 131 "ஐயோ! இப்படியெல்லாம் நிகழ்ந்தனமே!’ என்று ஏங்கலானான்; வள்ளுவர் வழியின் அருமையை உலகத்தார்க்கு உணர்த்தவே இவ்வாறு செய்தானோ! அனுமன் இலங்கையை எரித்ததோடு, அசோக வனத்தையும் அழித்துவிட்டுச் சென்றான். திக்கஜங்களின் கொம்புகளை மார்பில் தரித்தவன், தேவர்களை ஏவல் கொண்டவன், கயிலையை எடுக்கத் துணிந்தவன், ஆயிரம் மறைகளை அறிந்துணர்ந்தவன், அனுமன் செயல்களைக் கண்டு கலங்கி விட்டான். அனுமனால் அழிந்த இலங்கையை முன்னிலும் பன்மடங்கு சிறப்புடையதாகச் செய்வித்த பின்பும், அவன் கலக்கம் நீங்கவில்லை. இனிச் செய்ய வேண்டுவது யாது என்பதைப்பற்றி ஆராயக் கூட்டிய மந்திரி சபையில் நடந்து விட்டவைகளையே திரும்பத் திரும்ப எடுத்துப் பேசலானான். அனுமனுடைய செயல்களின் விளைவுகள் கண்ணுக்குத் தோன்றாதவாறு மயன் இலங்கையைப் புதுப்பித்த பின்பும், இராவணன் மனக் கண்களுக்கு அழிந்த இலங்கையே தெரியலாயிற்று, இஃது அவன் மனம் எவ்வளவு புண்பட்டிருக்க வேண்டும் என்பதையே நமக்கு வற்புறுத்துகிறது. சுட்டது குரங்கு எரிசூறை யாடிடக் கெட்டது கொடிநகர்; கிளையும் நண்பரும் பட்டனர்; பரிபவம் பரந்தது எங்கணும்; இட்டஇவ் அரியணை இருந்தது என்னுடல்! மற்றில தாயினும் மலைந்த வானரம் இற்றில தாகியது என்னும் வார்த்தையும் பெற்றிலம் (கம்பன் - 6082, 6084)
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/148
Appearance