பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i [69 - பெண் பழி பெரும் பழி சோ ழன் உலா வருங்கால் அவனைக் கண்ணுரக் கண்டுகளிக்க வேண்டுமென்று எண்ணுகின்றனர் காரிகையார், அவன்மீது கழி பெருங் காதல்கொண்டு கைவளை சோரக் கவின் அழிகின்றனர். இதனைக் கண்ணுறும் அவர்களுடைய அன்னையர் அவர்களை உள் வீட்டில் வைத்துக் கதவுகளையும் அடைத்துவிடுகின்றனர். சிறிது நேரங்கழித்து வந்த செவிலித்தாயர்கள் இச்செயலை அறிகின்றனர். அடைபட்டுக் கிடக்கும் அரிவையரின் ஏக்கத்தைக் காண்கின்றனர். அவர்களுள் செவிலியொருத்தி மற்றவர்களை நோக்கி இவ்வாறு பேசுகின்ருள்: ‘' அடைபட்டிருக்கும் மகளிர் அவலக் கவலையால் சாக்காட்டு நிலையை எய்திவிட்டால், அதனுல் வரும் ஏதம் பெரிது; மிகப் பெரிது. பெண்பழி பெரும்பழியாகி விடும். முத லில் கதவுகளைத் திறந்துவிடுங்கள். உறைந்தையர்கோன அவர்கள் கண்ணுரக் கண்டு களிக்கட்டும்! அதனுல் தீமைகள் விளையுமாயின் அவற்றைப் போக்கும் வழிகளைப் பின்னர்ப் பார்த்துக்கொள்வோம் : என்கின்ருள். மகளிரின் மனநிலையை நன்கு அறிந்த கவிஞர் அதற்கு ஒரு கற்பனை வடிவம் அமைத்து அழகிய சொற்படமாக்கித் தருகின்ருர். இதோ அப்படம்: திறந்திடுமின் றியவை பிற்காண்டும் மாதர் இறந்து படிற்பெரிதா மேதம்-உறந்தையர்கோன் தண்ணுர மார்பிற் றமிழர் பெருமானக் கண்ணுரக் காணக் கதவு.

  • இது தொல் பொருள். செய்யுளியல் 210-ஆம் நூற்பாவிற்குப் போசசிரியர் டிரையில் காட்டிய மேற்கோள்.