வாகீச கலாநிதி கி. வா. ஜகந்நாதன் ஆசிரியர், கலைமகள், சென் இன
பிறப்பு முதல் இறப்பு வரையில் அமைந்த மனிதவாழ்வில் மனிதன் எதை மறந்தாலும் இறைவனே மறக்கக்கூடாது. ஆதலின் இந்த நாட்டில் வாழ்க்கையில் எது நடந்தாலும் இறைவனை நினைப்பதற்குரிய வாய்ப்பை அமைத்திருக்கிருர்கள்.
ஒருவர் உயிர்நீத்து அமரராகி விட்டால் துயரத்தில்ை புலம்பு வார்கள் உற் றரும் உறவினரும். அந்தச் சமயத்தில் இறைவனைப் பாடித் துதித்தால் யாவரும் உலக நிலையாமையை உணர்ந்து இறைவ.ணர்ச்சி பெறுவார்கள். சைவர்கள் இல்லங்களில் யாரேனும் இறந்தால் திருவாசகம் பாராயணம் செய்வது வழக்கம்.
தென்னப்பிரிக்காவில் டர்பனில் உள்ள இந்தியர்களில் தமிழ் மக்கள் பலர். அவர்களுக்கு நம் சமயத்தில் ஈடுபாடு அதிகம். திரு என் ஸி. நாயுடு என்ற அன்டர் இத்துறையில் ஆர்வத்தோடு ஈடுபடுபவர். ஒருவர் அமரர் ஆகும்போது அவருடைய இல்லத்தில் அருளாளர் அருளிய திருப்பாடல்களே ஒதவேண்டும் என்ற நிய தியை உணர்ந்து பலவகை அருட்செல்வர்களின் பாடல்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்துப் புத்தகமாக அமைத் தால் பலரும் ஒதிப் பயன் பெறலாம் என்று எண்ணினர். சிறந்த தேவார வித்தகராகிய திரு. பி. எ. எஸ். இராஜசேகரன் அவர்களி டம் இந்தப் பணியை ஒப்படைத்தார்.
தென் ஆப்பிரிக்காவில் உள்ளவர்கள் இவ ற்றை எளிதில் படிப்பதற்கு உதவியாகத் தமிழ்ப் பாட்டுகளே ஆங்கில எழுத்திலும் எழுதி, அவற்றிற்குத் தமிழிலும் ஆங்கிலத்திலும் பொழிப்புரை எழுதி, ஒவ்வொரு பாடலுக்கும தோற்றுவாயாக ஒரு முன்னுரை யையும் எழுதி இந்த நூலே நன்கு பயன்படும்படி செய்தவர், என் நண்பரும் திருப்பனந்தாள் தமிழ்க் கல்லூரியில் முதல்வராகவும், சென்னை, தென்னிந்திய மொழி வடமொழி ஆராய்ச்சி நிலையத்தில் ஆராய்ச்சியாளராகவும் இருந்து இப்போது அண்ணும8லப்பல்கலைக் கழகத்தில் திருக்குறள் ஆராய்ச்சித்துறையில் பேராசிரியராக உள்ள திரு கா. ம. வேங்கட ராமையா அவர்கள். அவர் எழுதியுள்ள பொருள் விளக்கம் ஆங்கிலம் அறிந்த யாவருக்குமே பயன்படும்படி உள்ளது. இந்தத் தொண்டு மிகவும் பாராட்டத்தக்கது.
இது தென் ஆப்பிரிக்கத் தமிழ் மக்களுக்கு மட்டும் அல்லாமல், எல்லாத் தமிழ் மக்களுக்கும் பயன்படும் வகையில் அமைந்துள்ளது. இகை யாவரும் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
கி. வா. ஜகந்நாதன்