பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தொல்காப்பியம் சு.ச. நீர்வாழ் சாதியுள் நந்தும் நாகே. இளம்பூரணம் : (இ-ள்) நீர்வாழ்வனவற்றுள் நந்தென்பது உம் நாகு என்னும் பெண்பெயர் பெறும் என்றவாறு. பேராசிரியம் : (இ-ன்) இந்நான்கற்கும்2 நாகெனும் பெயர் உரித்து (எ-று). 'எருமை நல்லான் கருநாகு பெறு உம்' (பெரும்பாண்: 165) எனவும், "உடனிலை வேட்கையின மட நாகு தழிஇ யூர் வயிற் பெரும் பொழுதின்’ (அகம்:64) எனவும், “நாகிள வளையொடு பகன்மனம் புகூஉம்’ (புறம்: 266) எனவும் வரும். ஆய்வுரை : (இ-ள்) நாகு என்னும் பெண்மைப்பெயர் எருமை, மரை பெற்றம் என்னும் மூன்றினத்திற்கும் உரியதாகும். 'எருமையும் பெற்றமுந் தெரிப்பும் நாகே' எனப் பாடங் கொண்டு, தெரிப்பென்பது நிலத்தினும் நீரினும் வாழுந் தாரா வென்பர் இளம்பூரணர்’ எனப் பேராசிரியர் உரையின் அடிக் குறிப்பாக ம.நா. சோமசுந்தரம் பிள்ளையவர்கள் குறிப்பிட்டுள் ளார். வ. உ. சி. அவர்கள் பதிப்பித்த இளம்பூரணர் உரையில் இப்பாடமும் விளக்கமும் இடம் பெறவில்லை. (சுங்) (இ-ன்) நீர் வாழ்உயிரினத்துள் நந்து என்பதும் நாகு என்னும் பெண்மைப்பெயர் பெறும் எ-று. (சுச) கூடு. மூடுங் கடமையும் வாடல பெறாஅ. இளம்பூரணம்: (இ-ள்) மூடும்கடமையும்3 ஆட்டின் பெண்பால தென்றவாறு


-------

எருமை. மரைபெற்றம்,நந்து என்னும் இந்நான்கற்கும் நாகு என்னும் பெண்பாற் பெயர் உரியதாகும். 3. மூடுகடமை என்பன பெண்மை பற்றிய மரபுப் பெயர்கள்.