கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் 27
பெண்டிரின் கண்கள் நன்னெறியினின்று வழுவாதன என்றுங் கூறினான். கண்கள் கூட முறையற்றனவற்றைக் காண மறுக்கும் என்பதால், அவர்கள் பண்பாட்டிற்குக் கவிஞன் ஒர் எல்லை காட்டிக் கூறிவிடுகிறான். இப்பெண்டிருக்கும் ஆடவருக்கும் மிகுந்த கல்வியறிவும் உண்டு என்று கவிஞன் கூறப்போகிறான் என்றாலும், கல்வி அறிவுகளினும் சிறந்து வேண்டப்படுவது ஒழுக்கமேயாகலின், அதனை முதற்பாட்டிலேயே தெளிய உணர்த்தி மேற்செல்லுகிறான்.
பெண் கல்வி
இனிக் கவிஞன், அவர்கள் பெற்றுள்ள பண்பாட்டிற்குத் துணை செய்த கல்வியைப்பற்றிக் கூறுகிறான். அந்நாட்டில் பெண்டிரும் நிறைந்த கல்வியைப் பெற்றிருந்தனர் என்று கூறுகிறான் கவிஞன், வேறு எந்த நூலிலும் காண இயலாத முறையில் இக்கருத்தைத் தனியாக ஒரு பாடலில் கம்பகாடன் கூறுகிறான்; பெண் கல்வியில் இக்கவிஞனுக்கு இருந்த ஆர்வத்தை என் என்று கூறுவது! இந்தச் சந்தர்ப்பத்தில் பிளேட்டோ என்ற கிரேக்கப் பெரியார் தமது ரிபப்ளிக்கு' என்ற நூலில் கூறியுள்ளது அறிதற்குரியது:“ஆண் மகன் ஒருவனைத் தக்கவனாகச் செய்யும் அதே கல்வி, பெண் மகளையும் தக்கவளாகச் செய்யும், ஏன் எனில், அடிப்படையில் அவர் இருவருக்கும். பொதுத்தன்மை ஒன்றே.”[1] அதுவும் கம்பன் வாழ்ந்தது ஒன்பதாம் நூற்றாண்டில் என்று நினைக்கும்பொழுது நமது வியப்புப் பன்மடங்காகிறது. இப்போது கல்வி முறை இருக்கும் நிலையில் ஆடவரும் பெண்டிரும் ஒரே
- ↑ 1 You wifi admit that the same education which makes a man a good guardian will make a woman a good guardian; for their original nature. is the same— Yes. PLATO's Republic, Book V.