பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
106

எப்படிப் பேசினாலும் அதனைப் பொறுமையாகக் கேட்டு அறிந்து பயன்பெற வேண்டும்.

சொல்லில் வல்லமை வேண்டும்; சோர்வுபடாமல் இருத்தல் வேண்டும். அவனை யாரும் பேச்சில் வெல்லவே முடியாது.

எதனையும் வரிசைப்படுத்திச் சொல்லப் புகுந்தால் ஞாலத்தினர் அனைவரும் விரைந்து நீ கூறும் ஏவலைக் கேட்டு நடப்பர்.

குறட்பாப் போலச் சில சொற்கள் பேசி அறிவுறுத்தத் தெரியாதவரே மிகைபடப் பேசிக்கொண்டு இருப்பர்; பல சொற்களைத் தேடுவர்.

கற்றது விரித்து உரைக்கத் தெரியாதவர் கொத்தாக மலர்ந்திருந்தும் மணம் கமழாத பூவைப் போன்றவர் ஆவர்.

66. வினைத்தூய்மை
(செயலில் தூய்மை)

உனக்கு உன் நண்பர்கள் உதவி செய்யலாம்; ஆனால் நீ எடுத்துக்கொண்ட செயல், அதனின் தூய தன்மை, அதனைப் பொறுத்துதான் எல்லா நன்மைகளும் இருக்கின்றன. வினை தூயதாக இருக்க வேண்டும்.

புகழும நன்மையும் தாராத செயலை எப்பொழுதுமே தொடங்கக் கூடாது; வாழ்க்கையில் உயர விரும்புபவர் புகழ் கெடக்கூடிய செயலில் இறங்கவே கூடாது.

தெளிந்த அறிவுடையவர்கள் இடர்கள் மிகுதியாகப் பெற்றாலும் இழிவான செயல்களை மேற்கொள்ள