பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* : : தொல் காப்பியம் - பொருளதிகார ம்

மகளும் நற்றாயும் மறைத்துச் சொல்லப்பெறுவர் என்றவாறு, !

வருகின்ற சூத்திரம் மறைத்துச் சொல்லும் உள்ளுறை சொல்லுகின்றா ராதலின், அவ்வுள்ளுறை வாயில்களை விலக்கியவாறு. இவர் மறைத்ததனாற் குற்ற மென்னை ? இவர் குற்றேவல் முறைமையராதலாலும் கேட்போர் பெரியோர் ஆதலானும் வெளிப்படக் கூறாக்காற் பொருள் விளங்காமையானும் அவ்வாறு கூறினால் இலர் கூற்றிற்குப் பயனின்மையானும் வெளிப்படவே கூறும் என்க." (சசு) நச்சினார்க்கினியம் :

இது, தலைவியுந் தோழியும் வாயிலாசச் சென்றாருடன் கூறு வனவற்றுட் படுவதோர் வழுவமைக்கின்றது.

( இ-ள். தத்தங் கூற்றே-தோழிக்குந் தலைவிக்குமுரிய கூற்றின் கண் : வாயிற் கிளவி - வாயிலாய் வந்தார்க்கு மறுத்துத் தலைவனது பழிகளைக் கூறுங் கிளவிகளை; வெளிப்படக் கிளத்தல். மறையாது வெளியாம்படி கூறுதல்; தாவின்று உரிய - இங்கனம் கூறுகின்றேமே என்னும் வருத்தம் மனத்து நிகழ்தலின்றியே உரியவாம் (எ - ந. ’

அவை தலைவிக்குத் தோழிக்கு முரியனவும் தோழிக்கே ய, ரியனவுத் தலை விக்கே யுகியனவுமாம். வாயில்களாவார் ஆற். றாமையுந் தோழி முதலியோருமாம்.

நெஞ்சத்த பிறவாத நிறையில விரிவளென வஞ்சத்தான் வந்தீங்கு வலியலைத் தீவாயோ' (சலி, 69)

1. வாயில்கள் வெளிப்படக்கிளத்தல் உரிய எனவே, வாயில்கள் அல்லாத தலை , ... கற்றாயும் தம் கூற்றுக்களை வெளிப்படக் கூறாது மறைத்துக் கூறுதலும் உண்டு என்பது பெறப்படும் என்பர்.

2. அடுத்துவரும் சூத்திரம் 1:றைத் துக் கூறும் கூற்று வகையிலாகிய உள்ளுறை கலுகின்றதா தலின், வ யில்களாவார் தலைமக்களிடத்தே தாம் சொல்லக் கருதிய, wo. .

- 3. - - * :్న గడి - - * - * - தனை மறைத் துக்கூறாது வெளிப்படக் கூறுதல் வேண்டும் என விதித்தலும் மறைத். துக் கல தும் கிளவியாகிய உள்ளுறை வாயில்கட்கு உரியதன் றென ഖിയെക്കൂളു இக் ஆற்பாவின் போக்கம் என்பது இளம் பூரணர் கருத்தாகும்.

8. வாயிற் கிளவியாவது, தோழியும் தலைவியும் தம்பால் வாயில்ாய் வங்

தார்க்கு மறுத்துரைக்கற்து. வெளிப்படக்கிளத்தலாவது தாம் கூறக் கருதிய குத் -

நங்களை விளங்கக் கூறுதல். தாவின் று உரிய என்றது, குற்றத்தை இவ்வாறு வெளிப்படக் கூற வேண்டியுளதே என்னும் வருத்தம் மனத்தில் நிகழ்தலின்றியே துணிகது கூறு தல், தா என்பது வருத்தம் என்னும் பொருளில் வந்த உரிச்சொல்.