உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

இலக்கிய அமுதம்


நெடுங்கிள்ளிபால் இளந்தத்தர்

கோட்டைக்கு வெளியே நளங்கிள்ளிபால் பரிசு பெற்று மகிழ்ந்த புலவர் உள்ளே யிருந்த நெடுங் கிள்ளியை மட்டும் விடுவாரா? அவன்பாலும் சென் ருர், அரண்மனை மாடியில் நெடுங்கிள்ளி பலவகைச் சிந்தனையுடன் உலாவின்ை. நலங்கிள்ளியை வெல் லும் வழிகளை அவன் மனம் ஆராய்ந்தது. அவ் வளை இளந்தத்தர் அரசர் த்ெருவழியே வந்தர்ர்: நெடுங்கிள்ளியின் பார் வைக்கு இலக்கானர்; சோழன் நளங்கிள்ளியின் ஒற்றருள் ஒருவனே இவன் என நெடுங்கிள்ளியின் நெஞ்சு துணிந்தது. வறுமையெனும் இருளால் புலமையெனும் ஒளி மறைக்கப்பட்டு மாசுண்ட மணிபோல் வந்த தத்த ரைப் பிடித்து வர ஏவலாளரை அனுப்பினுன் வேந் தன். போர் என்னும் அச்சமே மன்னன் மனத்தில் நிலவியது; அச்சம் நிறைந்த அவன் மனம் புலவ ரைப் புலவராகத் தெளியவும் இயலாமல் ஒற்றரெ னவே துணிந்தது. "இவ்வொற்றலை வெட்டி வீழ்த் தினுல்தான் நாம் உய்வோம்” என எண்ணிய வேந் தன், புலவரைக் கொல்ல வாளை உருவி ஓங்கிளுன். "உடுக்கை யிழந்தவன் கைபோல' ஆண்டு ஓடி வந்து மன்னன் கையைப் பற்றி நிறுத்தி நின்ருர் கோவூர் கிழார். -

கோவூர் கிழார் அறிவுரை

"மன்ன! என்ன காரியம் செய்யத் துணிந்தாய்! ஆண்மை இருள் நின் அறிவுக் கண்ணே மறைத்தது கொல் புலவ்ர் வாழ்க்கையை நீ அறிவாயோ? பழு மரம் நாடும் பறவை போல வள்ளயே நாடும் தெள்ளியோர்தம் வறுமையிற் செம்மையை நீ உணர் வாயா? அரிய நெறிகளையும் நெடியவெனக் கருதா மல் வள்ளலை நாடியடைந்து கற்றது பாடிப் பெற் றது கொண்டு சுற்றம் அருந்தி மற்றது காவாது உண்டு வழங்கி உவந்து வாழும் பரிசில் வாழ்க்கை பிறர்க்குக் கொடுமை நினைந்தறியுமா? அறியா