உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 45 உறுப்பாகத் தயரதன் அந்தணர்கட்குப் பெரிய அளவில் தானம் செய்தானாம். தானம் வழங்கும்போது செல்வப் பொருளுடன் தண்ணிரும் தாரையும் வார்ப்பது உண்டு. மன்னன் மிகுந்த பொருள்களுடன் வார்த்த நீர் ஆறுபோல் பெருகிற்றாம். அதனால் அந்தணர்களின் அவாக் கடல் நிறைந்ததாம். அந்தணர்களின் ஆசைக்கு அளவில்லை என்பது உவரி கடல்) என்னும் சொல்லால் குறிப்பிடப் பட்டுள்ளது. அந்தக் கடலை நிறைக்கும் ஆறாகத் தயரதன் பொருள்களுடன் வார்க்கும் தண்ணிர் குறிப்பிடப் பட்டுள்ளது. 'பொய் வழிஇல் முனி புகல்தரு மறையால் இவ்வழி பெயர்கள் இசைத்துழி, இறைவன் கைவழி நிதி.எனும் நதி கலை மறையோர் மெய்வழி உவரி கிறைத்தன மேன்மேல்.’ (119) நிதி எனும் நதி = தண்ணிருடன் கூடிய செல்வப் பொருள்களாகிய ஆறு. மெய்வழி உவரி = அந்தணர்களின் உடம்பு முழுவதும் பொருள்கள் நிறைக்கப்பட்டன; ஆதலின், அவர்களின் ஆசை, மெய்வழி உவரி (கடல்) எனப்பட்டது. மிதிலைக் காட்சிப் படலம் அணிகலன்கள், சீதை பிறப்பதற்கு முன்பே, பெண்கள் பலரால் அணியப்பட்டு அவர்கட்கு அழகு செய்து பழகியிருப்பினும், சீதையால் அணியப்பட்ட பின்பு அவ்வணிகலன்கள் தனியழகு பெற்றனவாம். சீதை மற்ற மடந்தையரினும் மிக்க அழகுடையாள் என்பதைக் கம்பர் இவ்வாறு சிறப்பித்துள்ளார் பாடல்: 'இழைகளும் குழைகளும் இன்ன முன்னமே மழைபொரு கண்ணிணை மடங்தை மாரொடும் பழகிய எனினும் இப்பாவை தோன்றலால் அழகு எனும் அணியும் ஒர் அழகு பெற்றதே" (34)