பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 பால காண்டப் அரசர்க்காக அயல்நாடு சென்று போர் புரியவோ அல்லது தமக்காகப் பொருள் தேடவோ பிரிந்து சென்ற கணவர், தமது பிரிவுத் துன்பம் நீங்கும்படிக் குறித்த நாளில் வந்ததும், அவரைக் கண்டு மெலிவு நீங்கிப் பொலிவு பெற்று மகிழும் கற்புடைய பெண்டிர் போல், இரவில் வாடியிருந்த தாமரை மலர்கள் பொய்கையில் மலர்ந்து மணம் வீசும்படி ஞாயிறு தோன்ற, இராமன் இரவுக் கடலைக் கடந்தான்! பைண்டு வரும் குறி பகர்ந்து பாசறையின், பொருள் வயினின் பிரிந்து சென்ற வண்டு தொடர் நறுந்தெரியல் உயிர் அனைய கொழுநர் வர மணித் தேரோடும் கண்டு மனம் களி சிறப்ப ஒளி சிறந்து மெலிவு அகலும் கற்பினார் போல் புண்டரிகம் முகல் மலர அகம் மலர்ந்து பொலிந்தன பூம் பொய்கை எல்லாம்' (15) சீதையைக்கண்ட நாளிரவு வருந்திக் கொண்டிருந்தான் இராமன். இரவு முடிந்ததும் ஞாயிறு தோன்றியதைப் பற்றிக் கூறும் பாடல் இது. கணவர் வந்ததும் களிக்கும் கற்புடைய மகளிர் போல், ஞாயிறு தோன்றியதும் தாமரைகள் மலர்ந்து செழித்தன வாம். இதனால், ஞாயிற்றைத் தாமரையின் கணவனாகக் கூறுவது ஒருவகை இலக்கிய மரபு. கச்சியப்பர் கந்த புராணத்தின் காப்புச் செய்யுளில் சகட சக்கரத் தாமரை நாயகன்' எனவும், சிவப்பிரகாசர் திருவெங்கை உலாவில், செந்தாமரை நாதன் தேரில் பதாகையொடு நந்தா மதில்கொடிகள் நட்பாட'- (40,41)