பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 பால காண்டப் திரு அவதாரப் படலம் உயிரும் உடலும் : தயரதனுக்கு மக்கள் நால்வர் பிறந்தனர். அவர்களுள், நீலோற்பல மலரோடு தாமரை மலர்கள் கலந்து இருப்பது போன்ற மேனி அழகுடைய இராமனைத் தவிர, வேறு உயிரும் உடலும் இல்லை என்னும்படி, தயரதன் இராமன் மேல் மிக்க பற்றுக்கொண் டிருந்தானாம்: காவியும் ஒளிர்தரு கமலமும் எனவே, ஒவிய எழிலுடை ஒருவனை அலது ஒர் ஆவியும் உடலமும் இலதென அருளின் மேவினன் உலகுடை வேந்தர்தம் வேந்தன்' (120) இராமன் கருநீல நிறம் உடையவன் என்பதைக் காவி (நீலோற்பல மலர்) சுட்டுகிறது. அவனுடைய முகம், கண், கை, கால் ஆகியவை தாமரை போன்ற அமைப்பு உடையவை என்பதைக் கமலம் சுட்டுகிறது; இதனால், இராமனாக வந்த திருமாலைத் தாமரைத் தடாகம் என்று பெரியோர் பாடியுள்ளனர். இந்தப் பாடலில் உள்ள நயமாவது: தயரதன், ஏழுநாள் பயணம் பிடிக்கும் கேகய நாட்டிற்குப் பரதனை அனுப்பி விட்டு, கைகேயி வயிற்றில் பிறக்கும் பிள்ளைக்குப் பட்டம் சூட்டுவதாகக் கேகய மன்னனுக்கு வாக்கு கொடுத்ததாகக் கூறப்படும் வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு, இராமனுக்குப் பட்டம் சூட்ட முயன்றமையும், இராமனைப் பிரிய முடியாமல் பின்னர் உயிர் விட்டமையும் ஆகியவற்றிற்கு முன் கூட்டி வித்திட்டமை போன்ற ஒரு வகைக் காப்பிய முன்னோட்ட நயம் இப்பாடலில் குறிப்பாகஅமைந்துள்ளது. கையடைப் படலம் ஒருவனைத் தந்திடுதி: தயரதன், தன்னைப் புகழ்ந்த விசுவாமித்திரரை நோக்கி, அளவிலா மகிழ்ச்சியோடு கூறுகிறான்: பெரியீர்!