உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பும் வளர்ப்பும் 9. திருமாலும் நான்முகனும் பன்றியும் அன்னமுமாகி இறைவனுடைய அடியும் முடியும் தேடி அயர்வுற்றுப் பின்பு திருவைத்தெழுத்தினை ஓதி உய்ந்த செய்தியினை ஒன்பதாவது திருப்பாடலில் எடுத்துரைக்கின்றார். கலைஞானங்கட்கெல்லாம் முதல்வராகிய கயிலை தாதனின் திருவருள் நெறியினை அறிந்து உய்யும் மெய் யுணர்வின்றித் தம்மில் தாமே நன்மையைத் தேடிக் கொள்ள முயலும் சமணர் சாக்கியர் இவர்தம் சமய நெறிகள் பழிவிளைக்கும் குற்றமுடையனவே என்பதனைப் பத்தாம் திருப்பாடலில் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றார். இங்ங்ணம் இத்திருப்பதிகத்தைப் பத்துப் பாடல்களால் நிறைவு செய்து பதிகப்பயன் கூறும் பதினொன்றாம் பாடலாகிய திருக்கடைக் காப்பினையும் பாடித் தம் திருநாமத்தையும் அதில் பதித்து தம் கண் எதிரே விசும்பின்கண் விடைமீது தோன்றியருளிய அம்மை யப்பரைத் தொழுது நிற்கின்றார்." பிறவிப் பெருங்கடலைக் கடந்திடும்படி தம் திருவடிப் புணையினைச் சம்பந்தர் பெருமானுக்கு தந்தருள வந்த சிவபெருமான் உமாதேவியாருடன் திருத்தோணிபுரத் திருக்கோயிலை நோக்கி எழுந்தருள்கின்றார். காழி ஞானச் சிவக்கன்றும் தம் கண்வழி சென்ற கருத்து விடாது தொடர்ந்து செல்லத் தாமும் திருத்தோணி புரக் கோயிலை நண்ணுகின்றார். தவம் பல செய்து இவருக்குத் தாதையெனும் பெருமை பெற்ற சிவபாத இருதயரும் பிள்ளையாரை அடித்தற்கெடுத்த சிறுகோலும் 7. இங்ங்னம் ஞானசம்பந்தர் பதிகங்களில் எட்டாம் பாடலில் இராவணன் செய்தியும், ஒன்பதாம் பாடலில் திருமால்.பிரமன் பற்றிய செய்தியும், பத்தாம் பாடலில் சமண சாக்கியர் செய்தியும் திருக்கடைக்காப்பில் தம் பெயரும் விடாமல் மரபாக வருவதைக் காணலாம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/56&oldid=856489" இலிருந்து மீள்விக்கப்பட்டது