பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxvi தத்துவம், இதம், புருஷார்த்தம் என்று குறிக்கப்பெறும் தத்துவத்திரயத்தினை (திரயம்-மூன்று) திருவாய்மொழிப் பாசுரங்கள் சில கொண்டே நுட்பமாகப் பொருள் சொல்லி தெளிவாக்குகின்றார் பேராசிரியர், 'நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு' என்ற திருவாய்மொழி (8 8:5) யில் ஆழ்வாரின் அநுபவத்தைப் படம் பிடித்துத் தருகின்றார். அதற்கு ஒத்த தைத்திரிய உபநிடதப் பொருளையும் நினைப் பூட்டுகிறார்கள் (பக் 363-64). இப்படித்தான் எம்பெரு மானார் அருமைப்பாட்டோடு விளக்கும் உயிர்-உடல் உறவினையும் (சரீர-சரீரிபாவனை) அறிவு மயமான ஆன்மா அறிவுக்கு இருப்பிடமாகும் படியைத் தெளிவதான 'தர்ம பூதஞானம்' என்ற கொள்கையினையும் அற்புதமாகத் தெளிவாக்குகின்றார் பேராசிரியர் இந்த இயலில். பதினைந்தாவது இயல் மந்திரங்கள்’ என்பது, நம்மாழ் வாரின் நான்கு பிரபந்தங்களுமே வைணவ நெறி மிக உயர் வாகப் பேணும் அதன் தலையான மந்திரங்களான திரு மந்திரம், துவகம், சரமசுலோகம் ஆகிய மூன்றையும் எப்படி உள்ளடக்கிக் கg ன் பிக்கின்றன என்று எடுத்துக் காட்டு களுடன் பேராசிரியர் சுருக்கமாக, ஆனால் விளக்கமாக, முந்தைய இயலொன்றில் ஆன்மாவுக்கு இறைவனிடம் உள்ள சம்பந்த ஞானத்தை - நவவித சம்பந்தமாகக் கூறும் முறையை - நினைவூட்டும் வகையில் அருமையாகத் தந்துள் வாrர்கள், - தம்மாழ்வார் பேசுகின்றார்: தேனும் பாலும் கன்னலும் அமுதும் ஆகித் தித்திப்ப யானும் எம்பி ரானையே ஏத்தினேன்; யான் உய்வானே (திருவாய் 43:10) என்று.

  1. è

எல்iம் எங்கும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும் அவையுள் தனிமுதல் எம்மான் (திருவாய் 1.9:1)