உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

 எவ்விக்குத் துணையாக வந்த வேளிர்க்கு உரிய முத்துாற்றக் கூற்றம் எனும் நாட்டைக் கைக் கொண்டான்38 தென்னாட்டு வாழ்வினராய பரதர் என்பாரையும் வெற்றி கொண்ட செழியன் அவர்க்குரிய நெல்லூர் எனும் பெருரையும் கைப்பற்றினான்.39

தன் வெற்றிக்கெல்லாம் துணையாய் நின்ற நாற்படைபால் பேரன்புடையவனாய் விளங்கினான். வெற்றி பெற்ற பின்னரும், தலைநகர் திரும்ப விரும்பாது, பாசறையில், போரில் புண் பெற்றுவிட்ட மறவர்களையும், யானை குதிரைகளையும் புண் போக்கிக் காப்பதில் கருத்துடையவனாய்த் திகழ்ந்தான்40

"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தாராவர்; ஆகவே, உழவர் நலம் பேணுக" எனப் புலவர் கூறும் பொன்னுரைகளை ஏற்று அாசாண்டான்41 புலவர் போற்றும் புரவலனாகிய இவன் தானும் ஒரு புலவன் ஆவன்.

போரில் வெற்றி பெறேனாயின், எம் குடிகள் என்னைக் கொடுங்கோலன் எனப் பழிக்கட்டும், அவைக்களப் புலவர் மாங்குடி மருதன் உள்ளிட்ட புலவர்கள் என்னைப் பாடாராகுக; வறுமையால் வந்து இரப்பார்க்கு ஏதும் ஈயமாட்டா, வறுமை என்னை வந்தடையுமாக" என வஞ்சினம் கூறியதன் மூலம்42 இவன் நல்லியல்புகள் பலவற்றை அறியலாம்.

பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி

இவனைப்பாடிய புலவர்கள், காரிகிழார்43 (புறம்,6) நெட்டிமையார் 44 ஆகிய இருவர், மட்டுமே, இவர் பாடல்களால் அறியத் தக்க இவன் வரலாறு; இவன் பெயர் "குடுமி" என்பதும்,45 பகையரசர் கோட்டைகள்