பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- மதுரைக் கூடல் அழகர் பண்டைக்காலத்தில் நம் நாட்டில் தமிழுக்கும் நாகரிகப் பண்பிற்கும் ஒரு வளர்ப்புப் பண்ணையாகத் திகழ்ந்தது மதுரைமாநகர். இன்றும் தமிழ் நாட்டின் ஒரு முக்கிய பெருநகராகத் திகழ்கின்றது அ.து. மதுரை மாவட்டத்தின் தலைநகராகவும் தமிழகத்தின் இரண்டாவது பெருநகராகவும் விளங்கும் அந்நகர் இரண்டாண்டுகட்கு முன்னர் ம | ந க ரா ட் சி யி ன் (Corporation) நிலையினையும் அடைந்தது. கோயிலை நடுவாக அமைத்து இந்நகரை நிர்மாணித்த நகர மைப்புப் பொறிஞரின் அறிவு நுணுக்கத்தை இன்றைய பொறிஞர்கள் வியந்து போற்றுகின்றனர். மதுரையின் இதயம் போலமைந்த மீனாட்சிக் கோயில் இன்றும் புகழோங்கி நிற்கின்றது. சிற்பக்கலைஞர்கள் வியந்து போற்றும் வேலைத்திறங்கட்கும் பொது மக்களின் பக்திக் காதலுக்கும் ஒரு கருவூலமாகத் திகழ்கின்றது மதுரைக்கோயில். இந்தக் கோயிலில் பண்டையத் தமிழ்ச் சங்கம் இருந்தது; தமிழாராய்ச்சியும் நடைபெற்றது. மதுரைச் சொக்கலிங்கப் பெருமானும் நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி புலவரோடு புலவராக, தமிழ்ப் பெரும் புலவராக இருந்தார் என்று தமிழுள்ளம் கற்பனை செய்துள்ளது. மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்ட வர்கள் பாண்டிய மன்னர்கள். அவர்கள் பாரத காலத் திலேயே பெரும் புகழ் பெற்றிருந்தனர். பாண்டியன்