உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 25 இராமனும் சீதையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட நாளில் மாலை கழிந்து இரவு வந்தது. அந்த இரவில், திங்கள், உலகெங்கும் உள்ள இருள் முழுவதையும் மாலை யாகிய கையைப் பரப்பி உண்ண எண்ணியது போல் எங்கும் வெண்மையான மிக்க நிலவு ஒளியைப் பரப்பியது. எது போல் எனில், பரந்து விரிந்த நல்ல நீர் வளத்தினால் வயல்கள் செழித்துள்ள வெண்ணெய் நல்லூரில் உள்ள சடையனது புகழ் போலப் பரப்பியதாம். பாடல்: "வண்ண மாலை கைபரப்பி உலகை வளைத்த இருள் 始,● 6T6060s ID உண்ண எண்ணித் தண்மதியத்து உதயத்து எழுந்த கிலாக்கற்றை விண்ணும் மண்ணும் திசை அனைத்தும் விழுங்கிக் கொண்ட விரி நல் நீர்ப் பண்ணை வெண்ணெய்ச் சடையன் புகழ்போல் எங்கும் பரந்துளதால் (73) என்பது பாடல். தம்மை ஆதரித்த சடையப்ப வள்ளலை நன்றியறிவிக்கும் முகத்தான், கம்பர் தம் நூலில் பல இடங் களில் குறிப்பிட்டுள்ளார். அவற்றுள் இந்தப் பாடலும் ஒன்று. புகழை வெண்ணிறத்ததாகச் சொல்லுதல் இலக்கிய மரபு. பிற நூல்களில் இருப்பதன் றிக் கம்பராமாயணத் திலும் புகழ் வெண்ணிறத்ததாகச் சில இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. திங்கள் இயற்கையாக வெள்ளொளி பரப்பியது; ஆனால் இருளை விழுங்குவதற்காகப் பரப்பியது என ஆசிரியர் தாமாக ஒரு காரணம் குறித்தேற்றிச் சொல்லியிருப்பதால், இப்பாடல் தற்குறிப்பேற்ற அணி அமைந்ததாகும். இந்தப் பாடலில் விரிநல்நீர் என்பது காவிரியைக் குறிக்கும். எனவே, சடையனது ஊர், தஞ்சை மாவட்டத்து வெண்ணெய் நல்லூராகவே இருக்கும். கம்பர் பிறந்த திருவழுந்துார் பக்கத்தில் இருந்ததால்தான், இயற்கையாக