அவலம் 33 தீமையே உடையாரும், நன்மையே உடையாரும் இவ்வுலகில் இல்லை; முழுதும் தீமையே வடிவானவன் என்று நாம் யாரையும் தள்ளிவிடுதற்கில்லை. அப்படிப் பட்டவர்கள் இருப்பினும் அவர்கள் காப்பியத்தில் இடம் பெறுதல் இயலாத காரியம். எனவே, தீமையும் நன்மையுங் கலந்தவர்களே தலைவர்களாகிறார்கள். அவற்றுள் எது மிகுகின்றதோ அக்குணம் அவர்கள் வீழ்ச்சிக்குக் காரணமாகிறது என்றும் கண்டோம். இத் தீமைக்கும் அதன் மறுதலையாய நன்மைக்கும் முரண் ஏற்பட்டுப் போர் ஏற்படுகிறது. நன்மையே வடிவான கடவுளும், அல்லது இயற்கையும், அல்லது சக்தியும் இத்தீமையின் எல்லை தாளாது இதனை அழிக்க வருகின்றன்ர் என்று அறிகிறோம். அங்ங்ணம் அவர்கள் தீமையோடு மாறுபட்டு அதனை அழிக்க வருகையில் தான், அவ்வழிக்கும் சக்தியை நன்மையோடு தொடர்புடையதென எண்ணுகிறோம். அழிக்கும் சக்தி எதுவாயினும், அது நன்மையும் உண்மையும் உடையதாயிருக்கும் என்பதில் ஐயமில்லை. தீமை என்றேனும் ஒரு நாள் அழிந்தே தீரும். நன்மைகளே இரு பிரிவாகப் பிரித்து, ஒன்றை விட ஒன்று மேலே செல்ல நினைக்க அந்த நினைவின் விளைவாக அவலம் ஏற்படுதலும் உண்டு. அப்படிப் பட்ட நிலைமையில் நன்மை நன்மையை அழித்து விட்டது என்று கூறுதல் தவறு ஆகும் ஆனால், அழிந்த நன்மையிடத்தில் ஒரு தீமை இருந்ததல்லவா? அஃதாவது, ஏனைய பண்புகளும் நிலை பெற வேண்டும் இடத்தில் அவற்றை அழித்து விட்டுத்தானே ஆளவேண்டும் என்று நினைப்பதும் ஒரு தவறுதானே! அதன் காரணமாக அந் நினைவு மற்றொரு நன்மை யால் அழிக்கப்படுகிறது. ஆனால், பெரும்பாலான
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/52
Appearance