உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தலையாலங் கானத்துச் செருவென்ற
நெடுஞ்செழியன்

சங்ககால பாண்டிய மன்னருள் சிறந்து விளங்கியவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆவன், இவனைப் பாடிய புலவர்கள், ஆலம்பேரிசாத்தனார்18, இடைக்குன்றுார் கிழார்19 எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்20, கல்லாடனார்.21, குடபுலவியனார்22 குறுங்கோழியூர் கிழார்23, நக்கீரர்24, பரணர்25, பொதும்பில் கிழார் மகனார்26, மதுரைப் பேராலவாயர் 27, மாங்குடி கிழார்28,ஆகிய் பதினொரு புலவர்களாவர்,

இவனைப் பாடிய புலவர் எவரும் இவனை நெடுஞ்செழியன் என அழைத்தாரில்லை. "பசும் பூண் பாண்டியன்"29, "செழியன்"30 என்ற இரு பெயர்களினாலேயே அழைத்துள்ளனர். இவர்கள் பாடிய 25 குறும்பாடல்கள், 2 நெடும்பாடல்களிலிருந்து அறியலாகும். இவன் வரலாறு பின் வருவன.

செழியன் அரியணை ஏ று ங் கா ல் நனிமிக இளையன். துணையற்று நின்ற தனியன். இதைக் கண்ணுற்ற சேரனும்) யானைக் கண் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை), சோழனும், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மாள். பொருநன் ஆகியோரும் ஒன்றுகூடி "செழியன் இளைஞன்; தனியன்; நாமோ முதிர்ந்தவர்; எழுவர்; வென்று பெறலாம்; பொருளோ அதிகம், எனக் கருதிப் போர் தொடுத்து வந்தனர்.31

இளைஞனே எனினும், ஈடிலாத் திறனுடையனாய செழியன் பகைவர் செயல் அறிந்தான் வஞ்சினம் உரைத்து தேர் ஏறிப் போர்க்களம் புகுந்தான். கூடற்