இலங்கையின் மாட்சி 53 அத்துடனமைகிறான் ஆசிரியன். அவர்கள் பொழுதைக் கழிக்கும் வழியே மிகச் சிறந்ததாயுள்ளது. முருகியற்சுவையை முற்றுமுணர்ந்த அவர்கள். இசையிலும் இன்பத்திலுமே பொழுது போக்கு கின்றார்கள். பலர் பாடுகின்றனர். பலர் அப்பாடல் கட்கேற்ப ஆடுகின்றனர். சிலர் அவ்வாட்டத்திற்கேற்ப வாத்தியங்கள் முழக்குகின்றனர்; அன்றலர்ந்த கற்பக மலரையே விரும்பிச் சூடுகின்றனர். அவர்களோடு ஒருங்கிருந்து விளையாடுபவர் தேவ மாதர். அவர்களது து.ாபத்தினின் றெழுந்த புகை மேக மண்டலத்தை மூடுகிறது. கானகத்து மயில்களைப் போல்வும், அன்னங்களைப் போலவும் சென்று வான மகளிர் தெய்வத் தன்மையுடைய நீரால் மஞ்சன மாட்ட, அவர்கள் குளித்தெழுகின்றார்கள். புண்ணியஞ். செய்தமையான், தேவருலகத்து வாழ்வதாகத் கருதப்படுகிற தேவமாதர் மஞ்சனமாட்ட, அரக்கியர் ஆடுகின்றனர் என்றால், இது விந்தையன்றோ! மஞ்சன மாடி முடித்த மகளிர், உணவுண்டு, பின்னர் இசை இன்பம் துய்த்து, இறுதியில் கணவன்மாரோடு இன்பக் கேளிக்கையிற் பொழுது போக்குகின்றனர்; அவ்வின் பத்தின் நடுவே மது அருந்துகின்றனர். இதனை ஆசிரியன் "வரம்பின்றி வளர்ந்த காமம் வருத்திய பயிர்க்கு நீர்போல் அரு நறா அருந்துகின்றார்.”! என்று கூறுவது அறிந்து மகிழற்குரியது! மகளிரது வடிவழகைப் பல படியாக வியந்த ஆசிரியன், "ஓவியம் அனைய மாதர்” என்று கூறிமுடித்துவிடுகிறான். கற்பனை ஒன்றுக்கே இயைவதாகிய ஓவியம், கலையின் பாற்படும். கலை, மனத்தின் எல்லையைக் கடந்து
- Aesthetic Taste