79
பாண்டிநாடு, நில எல்லைக்கு அப்பாலும் இருந்தமையால், அதைக் காட்ட, வேலெறிய, அதனால் சினம் கொண்ட கடல், நிலப்பகுதியில் ஒரு பகுதியைத் தன்பால் கொண்டுவிட, நேர்ந்துவிட்ட அக்குறையை நிறைவு செய்துகொள்வான் வேண்டி வடபகுதியில் நிலங்கொண்டு நாட்டு எல்லையை விரிவுபடுத்திய வடிம்பலம்ப நின்ற பாண்டியன், தேவர்கோன் இந்திரனால் அழைக்கப் பெற்று அவன் கழுத்து முத்தாரத்தைப் பரிசாகப் பெற்ற பாண்டியன், இந்திரன் முடியை உடைத்தெறிய, அதனால் சினங்கொண்ட இந்திரன் பாண்டிநாட்டில் பெய்யாதீர் என மழை மேகங்களுக்கு ஆணையிட, அதனால் தன் நாட்டில் மழை இல்லாது போக, அம்மழை மேகங்களை வென்று கொண்டு வந்து மழை பெய்வித்துக் கொண்ட பாண்டியன், நாடாள்வான் காவல் உனைக்காக்கும் என உரைத்துவிட்டு, கீரந்தை என்பான், பொருள் தேடிப்போய்விட அதற்கேற்ப, இரவில், காவல் மேற்கொண்டு, நகர்வலம் வந்துகொண்டிருந்தபோது,பொருள் தேடிப்போனவன் திரும்பி வந்து, மனைவியோடு உரையாடிக் கொண்டிருக்க, கீரந்தை வந்தது அறியாமையால், அயலான் வந்துளனோ என்ற ஐயத்தால, கதவைத்தட்ட, கீரந்தை "யார் அது" எனக்கேட்டுக் குரல் எழுப்ப, அது கேட்டு, கீரந்தை மனைவியால் ஐயங்கொள்வனோ என்ற அச்சத்தால் நகரில் உள்ள அனைத்து வீட்டுக் கதவுகளையும் தட்டிக்கொண்டே, அரண்மனைக்குச் சென்றுவிடப், பொழுது விடிந்ததும், மக்கள் வந்து முறையிட, தட்டியது என் கைதான். அக்குற்றத்திற்காகத் தன் கையைத் தானே வெட்டிக் கொள்ள, வெட்டப்பட்ட, கை, பொற்கையாக வடிவெடுக்கப பெற்றுக் கொண்டவன். சிவபிரானுக்குத் தன் மகள்