உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88


மதிவாணன்

இவனைப் பாடிய சங்கப் புலவர் எவரும் இலர், சிலப்பதிகாரம்; உரைச்சிறப்புப்பாயிரம், அடியார்க்கு நல்லார் உரைமூலம், இவன், கடைச்சங்கம் நிறுவிக் கவியரங்கம் ஏறிய பாண்டிய மன்னர்களுள் ஒருவன், தன் பெயரால், "மதிவாணனி," என்ற நாடகத் தமிழ் நூல் இயற்றியவன் என்பது தெரிய வருகிறது.

மாலை மாறன்

மாறன் என்ற பெயரால், இவனைப் பாண்டியர் குலத்தவன் என்பதை மட்டும் அறிகிறோம். இவனைப் புலவர் எவரும் பாடவில்லை. ஆனால் இவனே ஒரு புலவன்: தலைவன் பிரிவால் நேரும் கொடுமையிலும் அது அறிந்து, ஊரார் அவனைத் துாற்றும் சொல் கேட்பதால், நேரும் கொடுமையே பெரிதாம் என்ற, தலைவி கூற்றமைந்த பாடல் ஒன்றை இவன் பாடியுள்ளான்52

மாறன் வழுதி

மாறன் வழுதி என்ற இவன் பெயர் கொண்டு இவனைப் பாண்டியர் மரபில் வந்தவன் என அறிய முடிகிறது. இவனையும் புலவர் எவரும் பாடவில்லை, மாறாக இவனே ஒரு புலவன். இவன் பாடிய பாக்கள் இரண்டு நற்றிணையில் இணைக்கப் பட்டுள்ளன. ஒன்று முல்லைத்திணை பாடல்,53 பிறிதொன்று குறிஞ்சித்தினை பாடல்.54